2 வருடங்களுக்குப் பிறகு திருமணம் பற்றி யோசிப்பேன்!- பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகம் ஆனவர் பாவனா. மலையாளத்தில் சில படங்கள் நடித்திருந்த போதிலும் தமிழ்தான் அவருக்குக் கைகொடுத்தது. அதன் பின்னர் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தினார்.
தற்போது தமிழில் அவருக்கு வாய்ப்பில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடிக்க பெங்களூருக்கும் திருவனந்தபுரத்துக்கும் ஹைதராபாத்துக்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார்.
இதற்கிடையே அவருக்கு திருமணம் என்று செய்தி கசிய, அவரிடமே கேட்டோம்:
"தமிழில் அசல் ரிலீசுக்குப் பிறகு சில படங்களில் நடிக்க கேட்டார்கள். கதை கேட்டேன். கதைகளில் என் கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. எனவே அந்தப் படங்களை ஒத்துக் கொள்ளவில்லை.
அடுத்த மாதம் நான் நடித்த முதல் கன்னடப் படம் ஜாக்கி. பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு ஜோடி. அடுத்த மாதம் ரிலீஸாகிறது. இதனால் கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளேன். அடுத்த படமான 'விஷ்ணுவர்த்தனா'வில் சுதீப்புக்கு ஜோடியாக நடிக்கிறேன். கன்னடம் பேச, புரிந்துகொள்ள கஷ்டமாக இருந்தது. இதனால், படத்தில் என் சம்பந்தப்பட்ட வசனங்களை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதை வைத்து நடித்தேன்.
மலையாளத்திலும் 3 படங்களில் நடித்து வருகிறேன். இதனால் திருமணம் பற்றி இப்போது யோசிக்கவே நேரம் இல்லை. இன்னும் 2 வருடங்களுக்குப் பிறகுதான் திருணமம் பற்றி யோசிப்பேன்," என்கிறார் பாவனா கூலாக.


Click it and Unblock the Notifications











