கமலுடன் நடிக்க மோனிகா ஆசை

பேபியாக பல படங்களில் நடித்தவர் மோனிகா. சிலந்தி படத்தில் அவர் காட்டிய கிளாமர் உச்சத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது பெருமளவில் கிளாமராக நடிப்பதைக் குறைத்துக் கொண்டு நடிக்க நல்ல வாய்ப்புள்ள படங்களாக பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார் மோனிகா.
இந்த நிலையில் கமல்ஹாசனுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக மோனிகா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அகராதி படத்தில் நான் நடிக்கிறேன். தமிழில் இரு படங்கள் உள்ளன. கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.
கமல்சாரின் பரம ரசிகை நான். சதி லீலாவதி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தேன். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் மோனிகா.
'அழகி'யின் ஆசை நிறைவேறட்டும்..!
Comments


Click it and Unblock the Notifications