சென்சார் வேலையை பெற்றோரும் செய்யவேண்டும்: ஆஷா பரேக்

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவி்ல் கலந்துகொள்ள வந்த ஆஷா பரேக், நிருபர்களை சந்தித்தபோது, தற்போது வெளிரும் திரைப்படங்களில் வரும் ஏராளமான காட்சிகள் குழந்தைகள் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும், சென்சார் போட்டின் செயல்பாடுகள் குறித்தும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆஷா பாரேக், 'சென்சார் போர்டு தன் பணியை செய்து கொண்டிருக்கும். அதேவேளையில் குழந்தைகளை அருகில் இருந்து கவனிக்க வேண்டிய பெற்றோர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும்.
படங்களுக்கு அதன் தரத்தை பொறுத்து சான்றிதழ்கள் சென்சார் மூலம் வழங்கப்படுகிறது. குழந்தைகளுடன் டிவி முன்பு அமரும் பெற்றோர் குறிப்பிட்ட படங்களையும், நிகழ்ச்சிகளையும் தவிர்த்து நல்ல நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்குமாறு ஏன் செய்யக் கூடாது?
பெற்றோருக்குத் தான் தங்கள் குழந்தைகள் மீது அக்கறை அதிகமாக இருக்க வேண்டும். அரசாங்கம் அமைத்துள்ள சென்சார் போர்டுடன் சேர்ந்து பெற்றோரும் அந்த வேலையை செய்தால்தான் நல்லது நடக்கும்' என்றார்.
டிவி நிகழ்ச்சிகள் பற்றி அவர் குறிப்பிடும் போது, 'நிறைய டிவி சீரியல்கள் வருகின்றன. ஆனால், திறமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனக்கு இதில் சௌகரியமாகப் படவில்லை. இயக்குனர்களுக்கு இங்கே இடமில்லை.
வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களே ஒரு ஸ்கிரிப்டை கொடுத்து, அதை எபிசோடாக எடுத்துத் தர கேட்கிறார்கள். கலைத் திறனுக்கும், படைப்பாற்றலுக்கும் வேலையில்லை' என அதிருப்தியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











