அதுக்குள்ள ரிட்டயராக்கிடாதீங்க! - லட்சுமிராயின் பொருமல்

By Chakra

Lakshmi Rai
நான் இன்னமும் பிஸியான நடிகைதான். அதுக்குள்ள என்னை ரிட்டயராக்கிடாதீங்க, என்றார் நடிகை லட்சுமிராய்.

தனக்கு திருமணம் நடக்கப் போவதாகவும், அதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் வரும் செய்திகளில் உண்மையில்லை என்ற லட்சுமிராய் மேலும் கூறுகையில், "நான் என்ன செய்தாலும் அது செய்தியாகி விடுகிறது. என் ராசி அப்படி போலும். இந்திய கிரிக்கெட் அணி ஜெயித்தாலும், சாம்பியன்ஸ் லீகில் டோனி ஜெயித்தாலும் அதை நான் பாராட்டும்போது செய்தியாவிடுகிறது.

எனது சொந்த வீடு மும்பையில் உள்ளது. அங்கே சென்று ஓய்வு எடுத்தாலும் ஹிந்திப் படத்தில் சான்ஸ் கேட்டு ஹிந்திப் பட தயாரிப்பாளர்களிடம் நான் போய் நிற்பதாக செய்தி வருகிறது. ஆனால் கிசுகிசுக்களால் எனக்கு கவலை ஏதுமில்லை.

மலையாளப் படம் ஒன்றில் கவர்ச்சியாக நடிக்கிறேன். நீச்சல் உடை, முத்தக் காட்சிகளில், சண்டை என தூள் கிளப்பியிருக்கிறேன்.

ஆனால் இதை நயன்தாரா போல நடிப்பதாக கூறுகின்றனர். கவர்ச்சி என்பது எந்தவொரு நடிகைக்கும் சொந்தமானதல்ல.

தமிழில் மங்காத்தா படத்தில் நடிக்கவுள்ளேன். வேறு 2 படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தாய்மொழியான கன்னடத்திலும் அழைப்புகள் வந்துள்ளன. எனவே நான் இன்னமும் பிஸியான நடிகைதான். இப்போதைக்கு திருமணம் குறித்தெல்லாம் யோசிக்கவே இல்லை," என்று பொருமித் தள்ளினார் லட்சுமிராய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X