Exclusive: நடிகர் ஸ்ரீ குணமாக லோகேஷ் கனகராஜ் எடுத்த முயற்சிகள்.. 3 BHK இயக்குநர் பகிர்ந்த விஷயங்கள்!

சென்னை: சில மாதங்களுக்கு முன்னர் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பார்த்து பரிதாபப்பட்டு பேசிய விஷயம் என்றால் நடிகர் ஸ்ரீ குறித்து தான். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஸ்ரீ வெளியிட்ட அவரது புகைப்படங்களைப் பார்த்து பலரும் அதிர்ச்சி ஆனார்கள். குறிப்பாக ஸ்ரீ போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டார் என்று எல்லாம் பலரும் பேசத் தொடங்கி விட்டார்கள். அவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள் காசநோயக் இருக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்தார்கள். அதன் பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முயற்சியால் நடிகர் ஸ்ரீ மீட்கப்பட்டவரின், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 BHK படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் நமது பிலிமி பீட் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான படம் மாநகரம். இந்த படத்தில் நடித்தவர் நடிகர் ஸ்ரீ. இருவரும் இந்த படத்தில் நடித்த காலத்திலேயே நல்ல நண்பர்களாக மாறினார்கள். மாநகரம் படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால் மொத்த திரையுலகமும் இந்த படக்குழுவின் மீது கவனம் செலுத்தியது. அதாவது, யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படி ஒரு படமா என பலரும் வியந்து போனார்கள்.

3 BHK Director Sri Ganesh Exclusive Interview About What Lokesh Kanagaraj Did Actor Sri Health

மருத்துவர்களின் எச்சரிக்கை: நடிகர் ஸ்ரீ தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான காலத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். இவர் நடித்த வழக்கு எண் 18/9 படம் பெரும் பாராட்டுகள் குவித்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இறுகப்பற்று. இந்த படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஸ்ரீ வெளியிட்ட அவரது புகைப்படங்களைப் பார்த்து பலரும் அதிர்ச்சி ஆனார்கள். குறிப்பாக ஸ்ரீ போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டார் என்று எல்லாம் பலரும் பேசத் தொடங்கி விட்டார்கள். அவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள் காசநோயாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்தார்கள்.

அம்மா குரல்: யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை, நடிகர் ஸ்ரீ, அவரது தாயாருக்கு மட்டும் போன் செய்துவிட்டு அவரது குரலைக் கேட்டு விட்டு அமைதியாக இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் எடுத்த முயற்சியால் நடிகர் ஸ்ரீ இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இப்போது நடிகர் ஸ்ரீ மெல்ல மெல்ல தேறி வருகிறார், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது எனக் கூறப்படுகிறது. இது குறித்து, 3 BHK படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் நமது பிலிமி பீட் சேனலுக்கு அளித்த பேட்டியில் " ஸ்ரீயின் புகைப்படத்தை பார்த்து நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன்.

லோகேஷ் கனகராஜ்: இது மட்டும் இல்லாமல் கடைசியாக அவருக்கு நான் எப்போது பேசினேன் என்று பார்த்தால், இறுகப்பற்று படம் வெளியான போது அவருக்கு போன் செய்துள்ளேன். ஆனால் அவர் எடுக்கவில்லை. அதன் பின்னர் படம் நன்றாக உள்ளது என்று மெசேஜ் செய்துள்ளேன். ஸ்ரீ இப்படி இருக்கிறார் என்றதும், லோகேஷ் கனகராஜ் எடுத்த முயற்சிகள் தான் அவரை மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. இப்போது அவர் குணமாகி வருகிறார். ஸ்ரீ மீண்டும் வந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று கூட எனக்கு எண்ணங்கள் இல்லை. மாறாக அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X