'3' படக் கதையை வாழ்க்கையில் நேரில் பார்த்திருக்கிறேன் - ராதிகா பாராட்டு!

இந்தப் படத்தை நேற்று பார்த்த ராதிகா, உடனடியாக படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவைப் பாராட்டினால்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "3 படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் போன்று தான் என்னுடைய ஆடை அலங்கார நிபுணர் ஒருவருக்கு மன நோய் வந்துவிட்டது.
இந்த நோயிலிருந்து வெளிவர முடியாமல் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். தனுஷின் கதாபாத்திரத்தைப் பார்த்ததும் அந்த இளைஞனின் நினைவுதான் எனக்கு வந்தது. என்னை மிகவும் பாதித்த சம்பவம் அது.
மிகவும் உணர்வுப் பூர்வமான கதையை ஐஸ்வர்யா தேர்வு செய்து இயக்கியுள்ளார். பெரிய துணிச்சல் வேண்டும். காட்சிகளை மிக கச்சிதமாக அமைத்துள்ளார். தனுஷும், சுருதியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார்.
மேலும் படம் குறித்த தனது கருத்துக்கலை ட்விட்டரிலும் எழுதியுள்ளார்.
இயக்குநராக ஐஸ்வர்யாவின் திறமை குறித்து ரஜினியிடம் பேசியபோது, அவர் மிகவும் மகிழ்ந்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











