1977ஐ எதிர்பார்க்கும் சரத்

By Staff

Sarathkumar with Farzana
1977 திரைப்படம் சரத்துக்கு மிகப்பெரிய வெற்றிபடமாக அமையும் என்கிறார் அதன் இயக்குனர் தினேஷ் குமார்.

தீபாவளிக்கு ரீலிசாக வேண்டிய படம் தற்போது பொங்கலும் முடிந்த நிலையில் விரைவில் வெளிவரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் விளம்பர படங்கள் எடுத்து வந்த தினேஷ் குமார் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இதில் சரத் குமார் தனது வெற்றி பார்மூலாவான அப்பா-மகன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை 1977ல் நடப்பதாக அமைந்திருப்பதால் அதையே பெயராக வைத்துள்ளனர்.

இரண்டு ஹீரோயின்களாக நமீதாவும், பர்ஷானாவும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தினேஷ் குமார் கூறுகையில்,

ஹாலிவுட்டுக்கு இணையாக பேசப்படும் படம். தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்துள்ளோம். எனக்கு சரத் குமாரை பல ஆண்டுகளாக தெரியும்.

படத்தில் அவரது பாத்திரம் பிரமாதமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது உங்களுக்கே அது புரியும். நமீதா வக்கீலாக நடிக்கவிருக்கிறார். கதையில் அவரது கேரக்டர் அழுத்தமாக இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X