ஹாலிவுட் 'அச்சமுண்டு'!

இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறியதாவது:
அமெரிக்காவில் வாழும் தமிழ் குடும்பம் பற்றிய கதை இது. ஹாலிவுட் நடிகர் ஜான் ரசே இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
படம் முழுவதும் அமெரிக்காவில் படமாகி இருக்கிறது. ஹாலிவுட்டை சேர்ந்த 60 டெக்னீஷியன்கள் இதில் பங்கேற்றுள்ளனர். எல்லோருமே பிரபலமான படங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்கள்.
தமிழ் படத்தை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சப் டைட்டில் போட்டு வெளிநாடுகளில் திரையிட இருக்கிறோம்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அமெரிக்காவில் நடந்து முடிந்துவிட்டது. முதல் முறையாக ரெட் ஒன் கேமராவை பயன்படுத்தியிருக்கிறோம். அடுத்த மாதம் படத்தை வெளியிடுகிறோம் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications