நான் கவர்ச்சி நடிகையல்ல-மீரா

மலையாள நடிகர் சங்கம் விதித்துள்ள தடையால் எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கம் போலவே பட்டாம்பூச்சி போல உற்சாகமாகவே இருக்கிறார் மீரா ஜாஸ்மின்.
தற்போது தெலுங்கில் இரு படங்களிலும், மலையாளத்திலும் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா. தெலுங்கில் ஒரு படத்தில் டாக்டர் ராஜசேகரின் தங்கையாக பாசத்தைக் கொட்டி நடித்து வருகிறார் மீரா. இன்னொரு பாசமலராக இப்படம் இருக்குமாம். ஆர்வமாக கூறுகிறார் மீரா.
சமீப காலமாக தான் கவர்ச்சிகரமாக நடிப்பதாக கூறப்படுவது குறித்து அதிருப்தி தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின். இதுகுறித்து அவர் குமுறுகையில், தமிழ், தெலுங்கு படங்களில் நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
ஒரு நடிகையின் ஆடையை வைத்துத்தான் கவர்ச்சி கணிக்கப்படுகிறது என்றால், நான் எந்தப் படத்தில் கவர்ச்சிகரமாக நடித்தேன் என்று என்னை விமர்சிப்பவர்கள் கூறட்டும்.
நான் எந்தக் காலத்திலும் எல்லையை மீறுபவள் அல்ல. கவர்ச்சி காட்டித்தான் பிரபலமாக வேண்டும், கவர்ச்சி நடிகையாகத்தான் பிரபலமாக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.
ஒரு நடிகை மனைவியாகவோ அல்லது காதலியாகவோ நடிக்கும்போது அந்த கேரக்டர் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்துத்தான் ஆக வேண்டும். அதேசமயம், அதில் எல்லை உண்டு. அது எனக்குத் தெரியும் என்றார் வேகமாக.
வேகத்ைதக் குறைத்து கல்யாணம் என்று டிராக்கை மாற்றியபோது, மாண்டலின் ராஜேஷைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். ஆனால் இப்போது அல்ல 2 வருடம் கழித்து என்று புன்னகையுடன் புல் ஸ்டாப் போட்டார் மீரா.


Click it and Unblock the Notifications











