யாரையும் காதலிக்கவில்லை- ஜெனிலியா

By Staff

Genelia
நான் தேஷ்முக்கை காதலிப்பதாக வரும் செயதிகளில் எந்த உண்மையும் கிடையாது. காதலிக்க இப்போது எனக்கு நேரமும் இல்லை, காதலிக்கிற மூடும் இல்லை என்கிறார் நடிகை ஜெனிலியா.

மகாராஷ்டிர முதல்வரின் மகனும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்- ஜெனிலியா இடையே காதல் என்றும் இருவரும் ரகசிய திருமணம் கூட செய்து கொண்டதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணமுள்ளன. இந்நிலையில் இந்தச் செய்திகளை மறுத்து ஜெனிலா அளித்துள்ள பேட்டி:

இதுவரை யாரைப் பற்றியும் நான் புகார் கூறியதில்லை. பாலிவுட்டில் எனது முதலடியை எடுத்து வைத்த நேரம் இக்கட்டான சூழல்களை சந்தித்தேன். உடன் நடித்த தேஷ்முக்கை நான் காதலிப்பதாக வரும் செய்திகள் தவறானவை.

எனக்கு காதலிக்க நேரம் கிடையாது. ஆனால் நான் காதலுக்கு எதிரியில்லை.

இப்போதுதான் பாலிவுட்டில் ஓரளவு கால்பதித்துள்ளேன். ஆனால் அதற்குள் இப்படி தொடர்ந்து செய்திகள் வந்து என்னை சங்கடப்படுத்துகின்றன.

பொதுவாக பாலிவுட் என்றில்லாமல் ஒவ்வொரு இன்டஸ்ட்ரியிலும் சில விஷமிகள் இருக்கிறார்கள். அவர்கள் வேலைதான் இது.

நான் பணியாற்றிய படங்களில் எனக்கு அமைந்தது நல்ல டீம். எனக்கு பாதுகாப்பாக என் அம்மா இருக்கிறார். பாலிவுட்டில் பணியாற்றும்போது ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் எழுகிறது. என் மீது எந்த கதாபாத்திரமும் திணிக்கப்படுவதில்லை. எந்த பாத்திரம் ஏற்றாலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதுதான் எனது வெற்றிக்குக் காரணம் என்கிறார் ஜெனிலியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X