For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷாவை ரொம்பப் பிடிக்கும்! - விவேக் ஓபராய்

    By Staff
    |

    Vivek Oberai
    தமிழ் நடிகைகளில் த்ரிஷாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அழகாக இருக்கிறார், அருமையாக நடிக்கிறார் என்றார் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய்.

    டிப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரிக்க, விவேக் ஓபராய் நடிக்கும் தி பிரின்ஸ் இந்திப் படம், ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் பிரின்ஸ் என்ற பெயரிலேயே வெளியாகிறது.

    இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக கோவை மற்றும் சென்னைக்கு வந்திருந்தார் விவேக் ஓபராய்.

    முதலில் கோவைக்கு சென்றவர், அங்கே பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். இதனால் மாலை 5.30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது பத்திரிகையாளர் சந்திப்பு இரவு 8.30 மணி வரை தாமதமானது.

    ஒருவழியாக சத்யம் திரையரங்குக்கு வந்த விவேக் ஓபராய் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் மன்னிப்புக் கேட்டவண்ணமிருந்தார். தாமதத்துக்கான காரணத்தையும் விளக்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    பிரின்ஸ் படம் ஒரு 'க்ளோக்கல்' படம். அதாவது, தரத்தில் சர்வதேச அளவிலும் உணர்வில் இந்திய அளவிலும் இருக்கும் 'பைசா வசூல்' படம் இது. படத்தைப் பார்க்கும் அனைவருமே இதனை ஒரு ஆங்கிலப் படமாகவே உணர்வார்கள்.

    படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள், இதற்கு முன் பெரும் சாதனை படைத்தவர்கள். ஆஸ்கர் சாதனையாளர் ரசூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் ஒரு புதிய சத்தத்தைக் கண்டுபிடித்துள்ளார். அதற்கே ஒரு மாதம் ஆனது.

    இந்தப் படத்தை மிக நவீன தொழில் நுட்பத்தை எடுத்துள்ளோம். இந்தப் படத்தை எடிட் செய்துள்ளவர் பாரிஸ் நகரைச் சேர்ந்த நிகோலஸ். காரணம் இந்தத் தொழில்மநுட்பம் புரிந்து அதை எடிட் செய்ய இங்கு யாருமே இல்லை. நிகோலஸ் இதில் மிகத் தேர்ந்தவர். முதலில் சில காட்சிகளை மட்டும் எடிட் செய்தவர், படத்தைப் பார்த்தபிறகு முழுப் படத்தையுமே எடிட் செய்ய முன் வந்தார். இதற்காக தனி கட்டணம் எதையும் அவர் வாங்கவில்லை.

    இந்தப் படத்தின் இசை இன்று பெருமளவு பேசப்படுகிறது. விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. சச்சின் குப்தா என்ற புதியவர் இசையமைத்துள்ளார். தமிழ்ப் பாடல்களையும் அவரே சொந்தக் குரலில் அருமையாகப் பாடியுள்ளார் (அப்போது பக்கத்திலிருந்த சச்சின் குப்தா ஒரு பாடலைப் பாடிக் காட்டினார்).

    இமய மலையில் தொங்கினேன்...

    இந்தப் படத்தின் முக்கிய விஷயம், எனது ஒரிஜினல் உழைப்பு. எந்த ஒரு டூப் முயற்சியும் இல்லாமல் அனைத்து ரிஸ்க்கையும் நானே எடுத்தேன். இமய மலையில் ஹெலிகாப்டரில் 8000 அடி உயரத்தில் பனிச் சிகரங்களுக்கு மத்தியில் தொங்கினேன். ஒரு மாடியிலிருந்து அடுத்த மாடிக்கு பைக்கில் டைவ் அடித்தேன். ஆனால் இதற்காக 5 மாதங்கள் கடும் பயிற்சி எடுத்தேன். எதையும் நாமே ஈடுபாட்டுடன் செய்தால் சிறப்பாக வரும் என்பதால் இப்படி ரிஸ்க் எடுத்தேன்.

    இந்தப் படத்தை நான் தமிழிலும் வெளியிடக் காரணம், சென்னை என்னுடைய தாய்பூமி. என் அம்மா பிறந்தது, வளர்ந்தது, நான் வளர்ந்தது எல்லாமே இந்த சென்னையில்தான். இந்த ஊரை நான் மிக மிக நேசிக்கிறேன். என் அம்மாவைப் போன்ற குணமுள்ள தமிழ்ப் பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

    காரணம் என் மீது என் அம்மா வைத்திருக்கும் அன்பு மிகவும் அபாரமானது. ஒரு தமிழ்ப் பெண் எனக்கு மனைவியாக வந்தால் அதே அன்பு தொடரும் என்று நம்புகிறேன்.

    காதல், திருமணம் போன்றவை கடைசி வரை நிலைக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். குறுகிய கால உறவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

    பில்லா பார்த்து வளர்ந்தவன்...

    சின்ன வயதில் நான் பார்த்ததெல்லாம் தமிழ்ப் படங்கள்தான். சூப்பர் ஸ்டாரின் பில்லா பார்த்து பரவசமடைந்திருக்கிறேன். கமலின் சகலகலா வல்லவன் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா டான்ஸ் நேத்து ராத்திரி யம்மா... பாட்டு வந்தபோது என் பாட்டி என் கண்களை மூடியது நினைவுக்கு வருகிறது.

    த்ரிஷா பிடிக்கும்...

    தமிழ் நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை த்ரிஷா. ஏனென்றால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். கச்சிதமாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து இந்தி படத்தில் நான் நடித்திருக்கிறேன். அதில் எனக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்த வேடத்தில், தமிழில் த்ரிஷா நடித்துள்ளார். அதைப் பார்த்து வியந்துபோனேன். த்ரிஷா இந்திக்கு வருகிறார் என்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

    மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். அது விரைவில் சாத்தியமாகும். செல்வராகவன் இயக்கத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன்.

    ஆனால் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. தமிழுடன் சேர்த்து இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்தால்தான் எனக்குள்ள மார்க்கெட் மதிப்பை பெற முடியும் என்பதால்தான் இப்படிச் சொல்கிறேன்.." என்றார் விவேக் ஓபராய்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X