வயித்தெரிச்சலில் வதந்தியைப் பரப்புகிறார்கள்: குத்து ரம்யா குமுறல்

இன்றைய தேதிக்கு கன்னட சினிமாவில் நம்பர் 1 நடிகை திவ்யா ஸ்பாந்தனா. அவர் சினிமாவில் மட்டுமல்ல பிரச்சனைகள் மற்றும் வதந்திகளில் சிக்குவதிலும் நம்பர் 1 தான்.
அண்மையில் தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் பெரிய பிரச்சனையாகி இறுதியில் கன்னட நடிகர் அம்பரீஷ் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.
திவ்யா நடித்து அன்மையில் வெளிவந்த 'ஜானிமேரா நாம்', 'சஞ்சு வெட்ஸ் கீதா' ஆகிய படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதனால் திவ்யா தனது சம்பளத்தை ரூ. 27 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக உயர்த்திவிட்டார் என்று கூறப்படுகின்றது.
திவ்யாவுக்கு அடுத்தபடியாக சம்பளம் வாங்குபவர் பிரியாமணி. பூஜா காந்தி ரூ. 22லட்சமும், பாவனா ரூ. 15 லட்சமும் வாங்குகிறார்களாம்.
என்ன திவ்யா திடுதிப்புன்னு சம்பளத்தை உயர்த்திட்டீங்களாமே என்று கேட்டதற்கு,
நான் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை. முதலில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் நான் அடிக்கடி தகராறு செய்வதாக சொன்னார்கள். அடுத்து என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாய் பரப்பிவிட்டார்கள்.
அவர்கள் அத்தனை செய்தும் நான் வெற்றிகரமாகத் தான் உள்ளேன். நான் நடிக்கவிருக்கும் 'காந்தி நகர மகாத்மே' இந்திய சினிமாக்களில் முக்கியமானது. அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் தான் சிலர் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புகிறார்கள்.
இதில் சில நடிகைகளுக்கும் பங்கு உள்ளது என்று எனக்கு தெரியும். விரைவில் அவர்களை சந்திப்பேன். என் மார்க்கெட்டுக்கு ஏற்பத் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றார்.
கன்னடத்தில் நம்பர் 1 நடி்கையாக இருந்தாலும் தமிழில் இப்போது பெரிய அளவில் நடிப்பதில்லை திவ்யா என்கிற ரம்யா.


Click it and Unblock the Notifications











