நமீதாவுடன் போட்டியா?-ஹேமமாலினி

இந்திர விழாவில் நமீதாவின் கிட்டத்தட்ட 'சக்களத்தி'யாக நடித்தவர் ஹேமமாலினி. கிளமாரில் நமீதாவுக்கு சரியான போட்டி எனும் வகையில் கவர்ச்சியில் கலக்கினார் அந்தப் படத்தில்.
அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. பெரும்பாலும் எல்லா படங்களிலும் கவர்ச்சி வேடங்கள்தான்.
இதுகுறித்து ஹேமமாலினி கூறுகையில், "என்னை அடுத்த நமீதா ஆக்கிக் காட்டுவதாக இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறினார். ஆனால் நமீதா ரேஞ்ச் வேற. அவரை எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர் அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியாது. அதுமட்டுமல்ல, நான் வித்தியாசமாக நிறைய ரோல்கள் பண்ண விரும்புகிறேன்.
இப்போது என் பெயர் கூட ஹேமமாலினி கிடையாது. உண்மையான பெயரான ஸ்ருதி பிரகாஷ் என்ற பெயரே நன்றாக இருக்கிறது. எனவே இனி நான் ஸ்ருதி பிரகாஷ்தான். அடுத்தவர்கள் பெயர் எனக்கு வேண்டாம்.
என்னுடைய திறமையை நம்பி நடிக்க வந்திருக்கிறேன். ஆனால், தொடர்ந்து எல்லோரும் கிளாமர் வேடங்களைத்தான் தருகிறார்கள். கேட்டால் இந்திர விழாவில் நீச்சலுடையில் நடித்தீர்களே என்கிறார்கள். அந்தப் படத்தில் காட்சி அப்படி. நீச்சல் குள காட்சியில் புடவை கட்டியா நடிக்க முடியும்?" என்கிறார்.


Click it and Unblock the Notifications











