நயன் மாதிரி கவர்ச்சி காட்ட மாட்டேன்-ஹனிரோஸ்

By Staff

Honey Rose
ஏற்கெனவே தெரிந்த முகம்தான்... என்றாலும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்திருப்பதாலோ என்னமோ... செம பிரஷ்ஷாக இருந்தார் ஹனிரோஸ். பெயரின் இனிமை தோற்றத்திலும்.

முதல் கனவே என்ற படத்தின் மூலம் தமிழில்தான் முதலில் அறிமுகமானார் ஹனி. ஆனால் அந்தப் படத்துக்குப் பின் மொழி மாறிவிட்டார். வழக்கம்போல 'நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை' என்ற காரணம்தான்!

கேரளாவின் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த இவரை தாய்மொழி கைவிடவில்லை. 3 மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துள்ளாராம்.

இப்போது, காத்தவராயன் படம் இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில், 'காந்தர்வன்' என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். நிறம் படத்தில் நடித்த கதிர் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது.

படக்குழுவினருடன் ஹனிரோஸும் வந்திருந்தார்.

ஹனிரோஸிடம் கேள்வி கேட்பதில் நிருபர்களிடம் அலாதி ஆர்வம் காட்டினர்.

குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்களா அல்லது செக்ஸியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையா என எடுத்த எடுப்பில் ஒரு கேள்வியை வீச, சற்று நேரம் யோசித்த ஹனி, "கொஞ்சம் கவர்ச்சி கலந்த குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதற்காக, நயன்தாரா அளவுக்கு அதிக கவர்ச்சி காட்டி நடிப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். மலையாள நடிகை என்றால் அந்த அளவு கவர்ச்சி காட்ட வேண்டுமா என்ன... கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கவர்ச்சியாக நடிப்பேன்", என்றார் படு புத்திசாலித்தனமாய்.

சரி... கேரள நடிகைகளின் அழகுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா? என்று இன்னொரு நிருபர் கேட்டதற்கு, தலையை இடம் வலமாக ஆட்டி... 'ஒரே காரணம் தேங்காய் எண்ணெய்தான்' என்றார் சிரிக்காமல்.

ஒரு வேளை ரூ.50 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி, நீச்சல் உடையில் நடிக்கச் சொன்னால் நடிப்பீர்களா? - இது அடுத்த கேள்வி.

'நிச்சயம் நடிக்க மாட்டேன். அப்படி ஒரு தமிழ் பட வாய்ப்பு வந்தது. நான் முடியவே முடியாது என்று கூறிவிட்டேன்' என்றார் (அட!).

இதுவரை தனக்கு பாய்பிரண்ட் என்று யாரும் இல்லை எனும் ஹனிரோஸூக்குப் பிடித்த நாயகர்கள் ரஜினியும் விஜய்யும்தானாம்.

புதிய நாயகிகள் வழக்கமாக சொல்லும் பதில்தானே!

கூடுதல் செய்தி:

காந்தர்வன் படத்தை இயக்கும் சலங்கை துரை, ஏற்கெனவே மோகன்பாபுவின் மகன் நடித்த தெலுங்குப் படத்துக்கு கதை-திரைக்கதை எழுதியிருந்தார். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதால், அதே படத்தை தமிழில் பெரிய அளவில் தயாரிக்கவிருக்கிறார்களாம். அந்தப் படத்தை இயக்கப் போகிறவரும் சலங்கை துரைதானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X