ஆனந்தக் கண்ணீரில் பாண்டிராஜ்!

பாண்டிராஜின் முதல் படமான 'பசங்க' படத்தின் ஆடியோவை பழம்பெரும் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவும், கலைஞானி கமல்ஹாசனும் வெளியிட்டதைத்தான் இவ்வாறு கூறுகிறார் பாண்டிராஜ்.
திரையுலகில் ஆரம்பத்தில் தான் பட்ட அவஸ்தைகள் குறித்து பாண்டிராஜ் கூறுகையில், எனது கதைக்கு தயாரிப்பாளரைத் தேடி 3 ஆண்டுகள் அலையாய் அலைந்தேன். இயக்குநர் சசிக்குமாரிடம் நான் எனது கதையைச் சொன்னபோது, இது அருமையான காமெடிக் கதை சார் என்று சொல்லி விட்டுச் சொன்னேன்.
கதையை சொல்லி முடித்தபோது அவர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். தானே தயாரிப்பதாக கூறினார். படத்தை முடிக்கு நான் சொன்ன நாட்களை விட கூடுதலாக ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டேன். இருப்பினும் அவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்றார் நெகிழ்ச்சியுடன்.
கவலைப்படாதீங்க, பசங்க காப்பாத்துவாங்க...
Comments


Click it and Unblock the Notifications