45 years of Mike Mohan: ரசிகர்கள் இருக்கும் வரை நானும் இருப்பேன் உருகிய மைக் மோகன்.. எஸ்க்ளுசிவ்!

சென்னை: ஜென்மீடியா தயாரிப்பில் இயக்குநர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ளது பவுடர் திரைப்படம். சமீபத்தில் இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் 1980-களில் தமிழ்த் திரைப்பட உலகில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் கலந்து கொண்டார்.

சினிமா துறையில் வெற்றிகரமாக 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நடிகர் மோகன். இன்றும் அதே பொலிவுடன் ஹரா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் நமது பிலிம் பீட் சேனலுக்கு நடிகர் மோகன் அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

கேள்வி: பவுடர் திரைப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: வித்தியாசமான கதையமைப்பு கொண்டது பவுடர் திரைப்படம். இத்திரைப்படம் வெற்றி பெற முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தில் நிக்கில் முருகன் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தை தயாரித்த ஜென் மீடியா நிறுவனத்திற்கும், படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீக்கும் எனது வாழ்த்துக்கள். படத்தின் எடிட்டர் குணா, கேமராமேன் ராஜபாண்டி, மியுசிக் டைரக்டர் லியாண்டர், சவுண்ட் நவீன் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நல்ல கதையம்சம் உள்ள இத்திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் இசை வெளியீட்டு விழா

விரைவில் இசை வெளியீட்டு விழா

கேள்வி: இந்த தோற்றம் எந்த படத்திற்காக?
பதில்: இந்த தோற்றம் எனது புதிய திரைப்படத்திற்கான கெட்டப். ஹரா எனும் திரைப்படத்தில் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. விரைவில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றார்.

45 ஆண்டுகள்

45 ஆண்டுகள்

கேள்வி: உங்களது சினிமாப்பயணம் குறித்து...
பதில்: அக்டோபர் மாதத்துடன் நான் சினிமாத்துறைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது. அதை நினைக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் இருக்கும் வரை நானும் சினிமாத்துறையில் இருப்பேன் என்று கூறியுள்ளார் நடிகர் மோகன்.

சிறப்பு நிகழ்வுகள்

மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் மோகன், பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி, பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் நடித்து 1986 ஆம் ஆண்டு வெளியான மௌன ராகம் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது . நடிகர் மோகன் சினிமா துறைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, பல இடங்களில் இவர் பெயரில் அன்னதானம் நடைபெற்றது. தற்போது நடிகர் மோகன் ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து குஷ்பு, யோகிபாபு போன்ற பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்டியூப் சேனலிலும் https://youtu.be/xjlM3H0MDjY இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X