70 வயசுல விக் வச்சிக்கிட்டு என்ன கூப்டுறான்.. அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையால் அவதிப்பட்ட 47 வயது நடிகை!

சென்னை: பார்க் என மாற்றப்பட்ட பூங்கா நகரம் படத்தில் நடித்தபோது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையால் அவதிப்பட்டதாக அம்மா நடிகை மாலதி அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 47 வயதாகும் நிலையில், டிக்டாக் மூலமாக பிரபலமான மாலதி சினிமாவில் அம்மா வேடங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

பூங்கா நகரம் என தொடங்கப்பட்ட படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்ததாகவும் 70 வயது தயாரிப்பாளர் தன்னிடம் தப்பாக நடந்துக் கொள்ள முயற்சித்த நிலையில், அதுகுறித்து வெளியே சொன்னதும், தன்னுடைய காட்சிகளையே படத்தில் இருந்து நீக்கிவிட்டு படத்திற்கு பார்க் என பெயரை மாற்றிவிட்டனர் என்றும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாலதி கூறியுள்ளார்.

ps malathi adjustment casting couch


தனது மகளையும் சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என அந்த நபர் ஆசைக்காட்டியதாகவும் அதன் பின்னர் ஹீரோயின் வாய்ப்பு இல்லை, தோழி கதாபாத்திரத்தில் நடிக்கட்டும் என்றார் என்றும் அவர் கூறியுள்ளார்.

70 வயசுல விக் வச்சிக்கிட்டு: 47 வயதில் அம்மா நடிகையாக நடிக்கலாம் எந்த பிரச்சனையும் இருக்காது என சினிமாவுக்குள் வந்தேன். கேஜிஎஃப் தான் நான் பிறந்த இடம். அங்கே ஏகப்பட்ட தமிழர்கள் உள்ளனர். நான் போட்டு வந்த டிக் டாக் வீடியோக்கள் டிரெண்டாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் நடிக்கலாம் என்கிற முயற்சியில் சென்னைக்கு வந்த போது ஒரு படத்தில் நடிக்க 20 ஆயிரம் கொடுத்தால் தான் வாய்ப்பு என்றனர். ஏமாற்று வேலை என நினைத்து அதிலிருந்து ஒதுங்கினேன். அதன் பின்னர் தயாரிப்பாளர் ஒருவர் 70 வயசுல விக் வச்சிக்கிட்டு வந்து என்னிடம் தப்பாக பேசியது ரொம்பவே கஷ்டமாகிடுச்சு என பேசியுள்ளார் மாலதி.

வீட்டுக்கு கூப்டமாட்டியா?: ஷூட்டிங் முடிந்து காரில் கொண்டு வந்து வீட்டுக்கு விடுறேன் என சொன்ன தயாரிப்பாளர். காரில் இருந்து இறக்கி விட்டதும். வீட்டுக்கு கூப்டமாட்டியா என்றார். அப்போதே அவருடைய எண்ணத்தை புரிந்துக் கொண்டு எங்க ஃபிளாட்டில் வெளியாட்கள் வந்தால் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என்றேன். அதெல்லாம் ஒன்றும் ஆகாது, வீட்டுக்கு வரேன் என்று அடம்பிடித்தார். உனக்கு அம்மா கேரக்டர் கொடுத்திருக்கிறேன். உன் பொண்ணுக்கும் படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன் என ஏகப்பட்ட பிட்டு போட்டு வந்த அவரை, அட்ஜெஸ்ட்மென்ட் போன்ற விஷயத்தில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை சார் என்னை விட்டு விடுங்கள் என்று வெளிப்படையாகவே பேசிவிட்டேன்.

நீயா வருவ: சரிம்மா உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். ஆனால், நீயாவே சீக்கிரம் என்னைத் தேடி வருவேன்னு திமிராக சொல்லிவிட்டு போனார். அதனால் தான் பயங்கர கடுப்பாகிடுச்சு. சினிமாவில் நடிக்க விரும்பினால், பெண் என்றாலே தப்பாக யூஸ் பண்ண மட்டுமே நினைப்பார்களா என்ன என நடிகை மாலதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இளம் நடிகைகள் பாவம்: வயதான பெண்களை கூட சினிமாக்காரர்கள் இப்படி விடாமல் துரத்தும் போது தான் இளம் நடிகைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்தேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து வரும் பல அப்பாவி பெண்களை இப்படி தங்கள் இச்சைக்காக சிலர் இரையாக்குவது கொடுமை என்றார். தன்னுடைய மகள் மேக்கப் உமனாக இருந்த நிலையில், அவரை நடிகையாக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அவர் மேக்கப் மட்டுமே போடட்டும் என சொல்லிவிட்டேன் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X