அமேசானில் இன்னும் 5 படம் ரிலீஸ்.. சூர்யா படங்களுக்கு ரெட் போடுவோம் என்பதா..? தயாரிப்பாளர் ஆவேசம்!

By

சென்னை: பிரச்னையை பேசி முடிப்பதை விட்டுவிட்டு சூர்யா படங்களுக்கு ரெட் போடுவோம் என்று சொல்வதா? என பிரபல தயாரிப்பாளர் ஆவேசமாக கேட்டுள்ளார்.

Recommended Video

Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். இதை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார்.

இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், 'பொன்மகள் வந்தாள் படத்தை, அதன் தயாரிப்பாளர் OTT பிளாட்பார்முக்கு கொடுத்துவிட்டார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பரபரப்பு பேச்சு

பரபரப்பு பேச்சு

இனி அவர்கள் தயாரிக்கும் மற்றும் அவர்கள் தொடர்புடைய படங்களை OTT -யிலேயே வெளியிட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளோம்' என்று கூறியிருந்தார். இதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தயாரிப்பாளர்கள் மத்தியிலும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இன்னும் 5 படங்கள்

இன்னும் 5 படங்கள்

இந்நிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறியிருப்பதாவது: இன்னும் 3 தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை OTT வெளியிட போறாங்க. 5 படங்கள் அதில் வெளியாகப் போகுது. அதுபற்றி அறிவிப்புகள் விரைவில் வரும். எல்லாமே 3 கோடி, 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட சிறு சிறு படங்கள். இந்த மாதிரி மீடியம், லோ பட்ஜெட் படங்களுக்கு OTT வாய்ப்பு பெரிய விஷயம்.

ரெட் போடுவோம்

ரெட் போடுவோம்

இந்த பிரச்னையான காலகட்டத்துல, அமேசான் பிரமைல படங்கள் ரிலீஸ் ஆனா, அந்த தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். லாக்டவுன்ல, சினிமா மாட்டி, கோமா நிலையில இருக்கும்போது, இப்படியொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுக்கு ஒரு வரைமுறை பண்ணணுமே தவிர, அவங்க படத்துக்கு ரெட் போடுவோம், அதை பண்ணக் கூடாது, இதைப்பண்ணக் கூடாதுன்னு சொல்றது, அடிப்படை வியாபார உரிமையை பறிக்கிற செயலா இருக்குது.

தவறான முன்னுதாரணம்

தவறான முன்னுதாரணம்

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் இதை சுமூகமாகப் பேசி முடிக்கணும்னு கேட்டுக்கறேன். அமேசான்ல இந்தப் படம் ரிலீஸாகி, அவங்களுக்கு நல்ல ரேட்டிங் கிடைச்சதுன்னா, அடுத்து அதிகமான படங்களை வாங்க வாய்ப்பிருக்கு. இந்த வாய்ப்பை என்னன்னு பார்க்கிறதை விட்டுட்டு, அதை ஆரம்பத்துலயே தடுக்க முயற்சிக்கிறது சரியானதல்ல. தவறான முன்னுதாரணம் ஆயிடும்.

நூறு சதவிகித உரிமை

நூறு சதவிகித உரிமை

திருப்பூர் சுப்ரமணியம் சார் இதுபற்றி பேசுவோம்னு சொல்லி இருக்கார். நாம பேசுவோம். சின்ன சின்ன படங்களும் இருக்கு. அதுக்கு எத்தனை ஷோ, ஆன்லைன் புக்கிங், கியூப் மேட்டர், விளம்பர ஷேரிங் மேட்டர் எல்லாத்தையும் பேசுவோம். OTT பிளாட்பார்ம் பிசினஸ் என்பது தயாரிப்பாளர்களின் நூறு சதவிகித உரிமை. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X