கள்ளக் காதலை நான் படத்தில் நியாயப்படுத்தவில்லை-சாமி

By Chakra

Director Sami
சிந்து சமவெளி படத்தில் கள்ளக் காதலை நான் படத்தில் நியாயப்படுத்தவில்லை என்று இயக்குனர் சாமி கூறியுள்ளார்.

மருமகள்-மாமனார் கள்ளக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாமிக்கு செல்போனில் தொடர்ந்து மிரட்டல்கள் வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது வீடு மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் அவரது கார் சேதமடைந்தது.

இது குறித்து சாமி சென்னை கே.கே. நகர் போலீசில் புகார் செய்ததையடுத்து தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 3ம் தேதி சிந்து சமவெளி படம் திரையிடப்பட்டுள்ள ரோகிணி, உதயம், ஏ.வி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்களுக்கு டைரக்டர் சாமி சென்றபோது அவரை சிலர் சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர்.

இந் நிலையில் இந்த மிரட்டல்களையடுத்து சாமியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இது குறித்து சாமி கூறுகையில், தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையை நான் சொல்லவில்லை. நெற்றிக்கண், உணர்ச்சிகள், அபூர்வ ராகங்கள், பூட்டாத பூட்டுகள் போன்ற படங்களில் சொன்ன கருத்துகளைத் தான் நானும் சிந்து சமவெளியில் சொல்லியிருக்கிறேன்.

படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து, சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். கள்ளக் காதலை நான் படத்தில் நியாயப்படுத்தவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X