For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நித்யானந்தாவுடனான செக்ஸ் வீடியோ வெளியானதால் தற்கொலைக்கு முயன்றேன்! - ரஞ்சிதா

  By Chakra
  |

  Ranjitha
  நித்யானந்தாவுடனான செக்ஸ் வீடியோ வெளியானதால் தற்கொலைக்கு முயன்றேன்! - ரஞ்சிதா

  தற்கொலை முயற்சி என்பது, அப்படி ஒரு முயற்சி நடந்து அடுத்தவரால் காப்பாற்றப்பட்டு வெளியில் தெரியும்போதுதான் செய்தியாகிறது.

  ஆனால் இப்போதெல்லாம் பிரபலங்கள் தற்கொலைக்கு முயன்று, தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டதாக செய்தி வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.

  அந்த வகையில் நடிகை ரஞ்சிதா, தான் தற்கொலைக்கு முயன்று, பின்னர் 'தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டதாக' தெரிவித்துள்ளார்.

  நித்யானந்தாவுடனான செக்ஸ் வீடியோ வெளியான பின் 8 மாதங்களாக எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் ரகசியமாக பதுங்கி இருந்த நடிகை ரஞ்சிதா, இப்போது திடீரென்று வெளியில் வந்து தொடர் பேட்டிகள் அளித்து வருகிறார்.

  தனியார் டி.வி. சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அந்தப் பேட்டியின் சில பகுதிகள் இவை:

  "எனக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள்.

  அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு கவலைகள் விலகியது. நித்யானந்தாவால் மன ஆறுதல் பெற்றேன். ஆசிரமம் பிடித்து போனது. மடத்தில் இருந்தவர்களும் பிடித்துப் போனார்கள்.

  அன்று முதல் நித்யானந்தாவின் பக்தையாக மாறினேன்.சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவும், நானும் ஆபாசமாக இருப்பது போல் டி.வி.யில் வீடியோ படம் வெளியானது. அதை பார்த்ததும் அதிர்ச்சியானேன். அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் அல்ல. இந்த வீடியோ வெளியாக காரணம் என்ன என்று யோசித்தேன்.

  நித்யானந்தாவை பழிவாங்க என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருப்பது புரிந்தது. சில சேனல்கள் தங்களின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்திக் கொள்ள அந்த வீடியோபடத்தை போட்டி போட்டு ஒளிபரப்பின. நான் அவமானப்படுத்தப்பட்டேன். சினிமாவில் பலகாலமாக நடித்து புகழ், இமேஜ் போன்றவற்றை சேர்த்து வைத்தேன்.

  அவை அனைத்தையும் ஒரே நாளில் இழந்தேன். ஒருகட்டத்தில் தற்கொலை முடிவுக்கு கூடபோனேன். அப்படி நான் செத்து போய் இருந்தால் என் தரப்பு நியாயங்களை சொல்ல முடியாமல் போய் இருக்கும். எனக்காக பேசயாரும் இருந்திருக்க மாட்டார்கள். எனவே தற்கொலை செய்யவில்லை.

  'என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற லெனின்'....

  வீடியோ படத்தை வெளியிட்ட லெனின் கருப்பன் சரியான ஆள் இல்லை. அவர் என்னை ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அப்போது அவர் மீது நான் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆசிரமத்தின் பெயர் கெட்டு விடும் என அமைதியாக இருந்தேன்.

  இப்போது ஆசிரமத்துக்கு எதிராகவே லெனின் கருப்பன் செயல்பட தொடங்கியுள்ளதால் அவரைப் பற்றிய விஷயங்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் முழுமையாக நம்புகிறேன்.

  எனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும். சினிமாவை விட்டு நானாக விலகமாட்டேன். கடந்த சில மாதங்களாகவே நான் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன். இப்போது நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். சிக்கலான நேரத்தில் என் கணவரும், குடும்பத்தினரும் ஆறுதலாக இருந்து எனக்கு தைரியம் கொடுத்தனர்.

  நான் நடிகை என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதட்டும். ஆனால் என் கணவர் இதில் சம்பந்தப்படாதவர். அவர் ராணுவத்தில் மரியாதையான பொறுப்பில் இருக்கிறார். அவரை ஏன் இந்த விஷயத்தில் இழுத்தார்கள் என்று புரியவில்லை. ஆபாச சி.டி. வெளியான போது நான் அமெரிக்காவில் சகோதரி வீட்டில் இருந்தேன்.

  எனக்கு பலதரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்தன. பயமுறுத்தப் பட்டேன். தனியொரு பெண்ணால் அவற்றை சமாளிக்க முடியவில்லை. எனவே தான் அமெரிக்காவிலேயே இருந்து விட்டேன். மீடியாவை சந்திக்காமல் இருந்தால் நான் தலை மறைவாகி விட்டதாக கருதக்கூடும். எனவே தான் நடந்த விஷயங்கள் பற்றி இப்போது பேட்டி அளிக்கிறேன். தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார்.

  English summary
  Actress Ranjitha told that she tried to destroy herself after seen the sex video scenes of her with fake godman Nithyananda. In her recent interview she also alleged that Nithy's former disciple Leni was tried to rape her in the past.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X