நல்ல தயாரிப்புகளின் விளம்பரங்களுக்கு மட்டும் ஓகே! - த்ரிஷா கறார்

சினிமா நடிகைகளுக்கு விளம்பர உலகில் நல்ல மவுசு இருந்து வருகிறது. குறிப்பாக முன்னணி நடிகைகளுக்கு கோடிகளில் கொட்டிக் கொடுத்து விளம்பரங்களில் நடிக்க வைக்கிறார்கள்.
இன்றைய தேதிக்கு முன்னணியில் உள்ள வர்த்தக மாடல்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். பான்டா குளிர்பானம், ஜவுளிக் கடை விளம்பரங்கள் என நிறைய கமர்ஷியல்களில் அவரைப் பார்க்க முடிகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விளம்பரங்களில் நடிப்பது எனக்குப் பிடித்தமான விஷயம்தான். ஆனாலும் அதில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளேன். காரணம், தெரியாத பொருளுக்கு அல்லது தீமை விளைவிக்கும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த எனக்குள்ள இமேஜைப் பயன்படுத்த மாட்டேன்.
எனக்கு நன்கு தெரிந்து அல்லது நான் பயன்படுத்தும் பொருள்களுக்கு மட்டும்தான் விளம்பர மாடலாக இருப்பேன்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications