விஜய்யின் 20 நிமிட வீடியோ.. அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும்.. பிரபலம் பகீர் தகவல்!
சென்னை: விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சங்கீதா. அந்த வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண விழாவில் விஜய், திரிஷா ஒரே காரில், ஒரே நிற உடையில் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ளது.
இதுகுறித்து Wow Tamizhaa யூடியூப் சேனலில் பேசி இருக்கும் சினிமா பத்திரிக்கையாளர் தேனி கண்ணன், விஜயின் உச்சகட்ட ஆணவம் தான் அவரின் இந்த செயல்பாடு, விஜயின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு இது ஒரு சின்ன உதாரணம். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே வெட்ட வெளிச்சமாக தான் யார் என்பதையும், தன்னுடைய உண்மையான சுரூபவம் என்ன என்பதையும் இந்த சமுதாயத்திற்கு விஜய் காட்டி அரசியல் ரீதியாக தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறார்.

பெண்கள் அதிருப்தி: திரிஷாவும் விஜய்யும் திருமணத்திற்கு ஜோடியாக சென்ற வீடியோவை பார்த்துவிட்டு தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது சினிமாவில் வரும் கிசுகிசுவாக இருக்கும், நாங்கள் இதை நம்பாமல் இருந்தோம். ஆனால், திருமணத்திற்கு த்ரிஷாவை அழைத்து வருவார் என நாங்கள் நினைக்கவே இல்லை. மனைவி சங்கீதாவின் மனநிலையையும் குழந்தைகளின் மனநிலையும் எவ்வளவு பாதிக்கும் என்பதை தெரியாமல் பொது வெளியில் விஜய் இப்படி நடந்து கொண்டது பெண்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய், திரிஷா நெருக்கம்: இருவரும் சேர்ந்து நடித்த கில்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தற்போது வரை அந்த படத்தினுடைய பாடல் ட்ரெண்டினில் இருக்கிறது. இதன் மூலமாகத்தான் இவர்கள் இருவருக்கும் இடையே அதீத நட்பு ஏற்பட்டது. இந்த தகவல் சங்கீதாவுக்கு தெரிந்தாலும் சினிமாவில் வழக்கம் போல வரும் கிசுகிசு நான் என தவிர்த்து விட்டார். அதன் பிறகு தான் சங்கீதாவிற்கு இந்த விஷயம் உண்மை என்பது தெரிய வந்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அப்போதே சங்கீதா, மகளை லண்டனுக்கு தனது பெற்றோருடன் அனுப்பி விட்டார். மகன் சஞ்சயுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். மகன் பட்டம் பெற்ற போது கூட விஜய் அதில் கலந்து கொள்ளவில்லை. இதைவிட ஒரு பெரிய கொடுமையை எந்த தந்தையும் தனது குழந்தைக்கு செய்ய முடியாது.
20 நிமிட வீடியோ: இது மட்டுமில்லை விஜயின் உண்மை முகம் இன்னும் வெளியே வரும் அவரின் 20 நிமிட வீடியோ கூடிய விரைவில் வெளியே வந்து அவரின் முகத்திரை கிழியும். மேடையில் ஏறி கருத்து சொல்லும் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது வரும் தகவலின் படி, விஜயின் மிகப்பெரிய சொத்துக்கள் அனைத்தும் விஜய்யின் பேரில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கணவரின் பெயரில் இருக்கும் சொத்தில் இருந்து தான் ஜீவனாம்சத்தை பெற முடியும் என்பதால், அவரின் சொத்துக்கள் அனைத்தும் பெயர் மாற்றப்பட்டு வருகிறதாம். இது தெரிந்து தான், சங்கீதா நீதிமன்றத்தை தற்போது தாடி இருக்கிறார். தனது தாய்க்கு ஆதரவாக சஞ்சய் களமிறங்க உள்ளார். விஜயின் அரசியல் வாழ்க்கையை அவர் தான் குழித்தோண்டி புதைக்கப்போகிறார் என சினிமா பத்திரிக்கையாளர் தேனி கண்ணன் அந்த வீடியோவில் பல தகவல்களை பேசி உள்ளார். இவர் சொல்லும் தகவல்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











