பொன்னியின் செல்வன் பற்றி அறிய தகவலை வெளியிட்டார் சுஹாசினி
Recommended Video
சென்னை:நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் தான் சுஹாசினி. இவர் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி கமல்ஹாசனின் அண்ணன் மகள் என்று இவருக்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இவர் நமது பிலிமி பிட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் அதில் பல சுவாரசியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

எனக்கு நெசவாளர்கள் செய்யும் உடைகள் பிடிக்கும் மற்றும் மதுரை சுங்குடி சேலை பிடித்தமான உடை என்று கூறினார் சுஹாசினி.
மணிரத்னம் படங்களில் உங்களுக்கு பிடித்த ஆடை வடிவமைப்பாளர் யார்?
பானு அத்தையா அவர் ஒரு ஆஸ்கார் விருது வாங்கியவர் காந்தி திரைப்படத்திற்காக அந்த விருதை பெற்றார். இருவர் படத்தில் ஆடை வடிவமைப்பு வித்தியாசமாக இருக்கும். தற்போது ஏகா லகானி தான் எங்கள் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் மணிரத்னம் அவருக்கு ஒத்து போகிறது அவர் தான் தொடர்ந்து பத்து வருடங்களாக எங்களுடன் பணியாற்றுகிறார். நளினி ஸ்ரீராம் நாங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தோம்.

மணிரத்னம் படங்களில் உங்களுக்கு பிடித்த பெண் கதாபாத்திரம்?
அவருடைய எல்லா படங்களிலும் பெண்கள் பவர்புல்லாக தான் இருப்பார்கள் மௌன ராகம் திவ்யா(ரேவதி) மற்றும் ராவணன் நந்தினி(ஐஸ்வர்யா ராய்) இந்த கதாபாத்திரங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். மற்றும் அலைபாயுதே படத்தில் நடித்த சக்தி (ஷாலினி) ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை மிஸ் செய்கிறேன் என்று கூறினார் சுஹாசினி. அமிதாப்பச்சன் கூட கூறுவார் இவ்வளவு நல்ல கதாநாயகியை அஜித் திருமணம் செய்து கொண்டார் என்று இனிமேல் நடிக்க மாட்டாரே என்று சொன்னார் அமிதாப்பச்சன். இது போன்ற ஒரு நடிகையை பார்த்ததில்லை என்றும் கூறுவார் அவர் என்று அழுத்தமாக கூறினார்.
நீங்கள் எப்போது நடிக்க போகிறீர்கள் ?
நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மணி சார் கூட கூறுவார் அடிக்கடி நல்ல கதாபாத்திரம் இருந்தால் நடி உனக்கு சந்தோஷமாக இருந்தால் நடி என்று கூறுவார்.

பொன்னியின் செல்வன் பற்றி யாரும் அறியாத ஒரு விஷயம்?
ஜெயம் ரவி ரொம்ப அடக்கமானவர் அனைவரிடமும் பேசுகையில் பணிவாக தான் பேசுவார். மணி கூறினார் எப்பொழுது நீ பொன்னியின் செல்வனில் நடிக்க ஆரம்பித்தியோ நீ ராஜா ராஜாதி ராஜா. நீ நடந்து வரும் பொழுதே உன்னிடம் ராஜா கலை இருக்க வேண்டும் நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது போன்ற பல கேள்விகளுக்கு தனது பதிலை சுஹாசினி வழங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











