twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இருக்கா.. இல்லையா சொல்லுங்க பிளீஸ்! – டிமாண்ட்டி காலனி “ராகவனுடன்” ஒரு "சிரிசிரி" சந்திப்பு!!

    |

    சென்னை: தமிழ் சினிமா...இது ஒரு மாயப் பிரதேசம்... இந்த உலகத்தில் மாட்டி தொலைந்து போனவர்களும் உண்டு... கனவு திடீரென்று கைகூடியவர்களும் உண்டு.

    அப்படித்தான் சனந்துக்கும்... விஸ்காம் முடித்துவிட்டு சினிமாதான் உலகம் என்று வந்தவருக்கு முதலில் கிடைத்தது குறும்பட வாய்ப்புகள்தான்.

    எனினும், கண்டிப்பாக நமக்கும் சினிமா உலகில் இடம் உண்டு என்று நம்பிக்கை இழக்காமல் இருந்தவருக்கு ஒரு குறும்படமே வாய்ப்பையும் வாங்கித் தந்துள்ளது.

    எகிறும் பலோயர்ஸ் லிஸ்ட்:

    எகிறும் பலோயர்ஸ் லிஸ்ட்:

    இவர் நடித்த "மது" குறும்படமும், அதில் இவருடைய நடிப்பும் கொண்டு நிறுத்திய அடுத்த களம்தான் "டிமாண்ட்டி காலனி". முதல்படமே அவருக்கு பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பாலோயர்களின் எண்ணிக்கையை எகிற வைத்துள்ளது.

    வாங்க பழகலாம் சனந்த்:

    வாங்க பழகலாம் சனந்த்:

    சினிமாவில் வளர்ந்துவரும் நட்சத்திரமான சனந்த்துடன் ஒரு ஜாலி சந்திப்பும், கலகப்பான கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களும் உங்களுக்காக!!

    அப்போ “நோ” இப்போ “யெஸ்”:

    அப்போ “நோ” இப்போ “யெஸ்”:

    உங்க பேமிலி பத்தி சொல்லுங்க சனந்த்... எல்லோருக்குமே உங்களோட இந்த கெரியர் பிடிச்சுருக்கா?

    என் பேமிலில நான், அம்மா, அப்பா, ஒரு தங்கை அப்புறம் பாட்டி... எங்க வீட்லையும் பையன் எப்டியாவது எஞ்சினியரிங் முடிச்சுடுவானு சேர்த்து விட்டாங்க. ஆனா, ஒரே வருஷம்தான்...

    சினிமாதான் உலகம்:

    சினிமாதான் உலகம்:

    எனக்கு சினிமாதான் முடிவு செஞ்சுட்டு எம்.சி.சில விஸ்காம் சேர்ந்துட்டேன்... வீட்டில் எல்லாருக்குமே வருத்தம்தான்... ஆனா, இப்போ எல்லாருமே அதை ஏத்துகிட்டாங்க... இப்போ நான் ரொம்ப ஹேப்பி..

    சான்ஸ்க்கு காரணம் ஷார்ட் பிலிம்ஸ்:

    சான்ஸ்க்கு காரணம் ஷார்ட் பிலிம்ஸ்:

    நைஸ்...உங்க் ஷார்ட் பிலிம்ஸ் பத்தி சொல்லுங்க.... இதுவரை நிறைய நடிச்சுருக்கீங்களா?

    ஆமா... நிறைய ஷார்ட் பிலிம்ஸ் பண்ணியிருக்கேன்... பட், எனக்கு பெரிய ஒரு கெரியர் கிராப்பா அமைஞ்சது மது... அந்த படம் யூடியூப்ல பார்த்துட்டுதான் டிமாண்டி காலனி சான்ஸ் எனக்கு கிடைச்சது...

    பையன் கலக்குறான்ப்பா:

    பையன் கலக்குறான்ப்பா:

    அந்த ஷார்ட் பிலிம் பார்த்துட்டுத்தான் பையன் நல்லா நடிச்சுருக்கானே அப்டினு இயக்குனர் அஜய் ஞானமுத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார். முதல்படமே ஒரு நல்ல ரீச்சபிள் பிலிம்மா அமைஞ்சுடுச்சு.

    ஹையோ பேயீஈஈஈஈஈ:

    ஹையோ பேயீஈஈஈஈஈ:

    சரி..முதல் படமே ஒரு பேய் படத்தில் நடிச்சுருக்கீங்க... அதுவும் ரொம்ப கமர்ஷியலா இல்லாம எல்லாருக்கு அடுத்து என்னாகும் அப்டிங்கற மாதிரியான பிலிம்... அந்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு?

    ரொம்ப ஜாலியான ஒரு டீம்... அருள்நிதி ரொம்ப பிரெண்ட்லி... டீமில் மத்தவங்களும் அப்டிதான்... அதனால சூப்பர்ப் எக்ஸ்பீரியன்ஸா இருந்துச்சு...

    டிரெண்டி டிமாண்ட்டி:

    டிரெண்டி டிமாண்ட்டி:

    சூப்பர்ங்க... ஓகே டிமாண்டி காலனி படம் பத்தி சொல்லுங்க...

    ஒரு லோ பட்ஜெட் படம் சூப்பரா ஓடிட்டு இருக்க காரணம் கதையோட சீக்குவன்ஸ்தான்... வேகமா டிரெய்லர் ரீலீஸ் ஆகி, உடனே கரெக்ட டைம்ல படமும் ரீலீஸ் ஆனதால அதுவும் ட்ரெண்டில் இருக்கற பேய்க் கதை அப்டிங்கறதால செமையான ரீச் படத்துக்கு...

    யாருப்பா அது சொல்லுங்க:

    யாருப்பா அது சொல்லுங்க:

    ஏங்க அந்த டிமாண்ட்டி கேரக்டரில் நடிச்சவர் யாருங்க? நெட்ல எங்க தேடினாலும் கிடைக்க மாட்டீங்கறாரே?

    அந்த காலனில வர எல்லோருமே புரொபஷனல் சினிமா நடிகர்கள்...ஆனா, டிமாண்ட்டியா வர அவர் மட்டும் புதுச்சேரிக்கு வந்த ஒரு டூரிஸ்ட்... பின்லாந்துக்காரர்... அவரோட உயரமே 6.9 அப்டினா பார்த்துகோங்க... எல்லாருமே நிமிர்ந்துதான் பார்க்கணும்... அவர்தான் இந்த கேரக்டருக்கு கரெக்டா இருப்பாருனு நடிக்க வச்சுட்டார் இயக்குனர்..

    கொஞ்சம் அப்டி கொஞ்சம் இப்டி:

    கொஞ்சம் அப்டி கொஞ்சம் இப்டி:

    ஹப்பா நல்லவேளை சொல்லிட்டீங்க... சரி பேய்ப் படத்தில் நடிச்சுருக்கீங்க பேய்னா பயமா உங்களுக்கும்?

    கண்டிப்பா இருக்குங்க... ரொம்ப பயம் இல்லாட்டியும் பேய் அப்டிங்கற வார்த்தயே எல்லாருக்கும் பயம்தானேங்க... அதனால எனக்கும் பயம் இருக்கு.

    இருக்கு ஆனா இல்லை:

    இருக்கு ஆனா இல்லை:

    டிமாண்ட்டி காலனி நிஜமாவே இருக்காமே? இந்தப் படம் முழுக்கவே நிஜக்கதைதானா?

    டிமாண்ட்டி காலனினு நிஜமாவே ஒரு இடம் சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் இருக்குங்க... அங்க நைட்ல ஏதேதோ சத்தமெல்லாம் கேட்கும் அப்டிங்கறதும், இந்த டிமாண்ட்டியோட கதையும் வாய்வழிச் செய்தியா உலா வரதுதான்... நிறைய பேர் இறந்தும் போயிருக்கறதா சொல்றாங்க...

    செயின் இருக்கும்னு போயிடாதீங்க:

    செயின் இருக்கும்னு போயிடாதீங்க:

    ஆனா, அந்த செயின், அந்த அபார்ட்மெண்டில் நடக்கற விஷயங்கள் எல்லாம் முழுக்க, முழுக்க கற்பனைதான்...சோ செயினைத் தேடிலாம் போய்டாதீங்கப்பா...

    சத்தியமா இல்லைங்கோவ்:

    சத்தியமா இல்லைங்கோவ்:

    ஓ... அப்போ பிலிம்ல வர பில்டிங் கூட நிஜ டிமாண்ட்டி காலனிதானா?

    இல்லவே இல்லைங்க... நிஜ டிமாண்ட்டி வீடு வேற மாதிரி இருக்கும்... படம் வந்தப்புறம் நைட் 3 மணிக்கெல்லாம் ஏதோ சுற்றுலா வர மாதிரி கூட்டம் குவியவும் இப்போ அந்த இடமே மூடிட்டாங்க... படத்தில் வர டிமாண்ட்டி காலனி இன்ட்டீரியரும், பட்டினப்பாக்கம் வீட்டோட இன்டீரியரும் கூட செட்தான்ங்க...

    எல்லாத்துக்கும் ரெடிதான்:

    எல்லாத்துக்கும் ரெடிதான்:

    முதல் படமே செம லக்கியா உங்களுக்கு அமைஞ்சுடுச்சு... இதுக்கப்புறம் எந்த மாதிரியான கேரக்டரெல்லாம் பண்ற ஐடியா இருக்கு? மெயின் ஹீரோ?

    கண்டிப்பா ஹீரோவா நடிக்கற சான்ஸ் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்.... வித்தியாசமான கேரக்டர்ஸ் எதுவா இருந்தாலும் நடிக்க ரெடி... இப்போ கூட சஸ்பென்ஸான ஒரு கேரக்டர்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன்... வாய்ப்பு கிடைச்சா வில்லனா நடிக்க கூட ரெடி...

    சின்னச் சிரிப்புடன் சொல்லி முடித்தார் சனந்த்...!

    English summary
    The upcoming actor Sanath shared his thoughts about Demonte colony and his future plans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X