படம் சுத்த வேஸ்ட்.. ஒண்ணுமே இல்ல.. ஆர்.ஜே.பாலாஜி சொதப்பிட்டார்.. கருப்பு விமர்சனம்!

சென்னை: இன்று தியேட்டரில் வெளியான கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படம் பார்த்த ரசிகர் ஒருவர் ஆர்.ஜே பாலாஜி நல்ல கதையை கெடுத்துவிட்டார். சூர்யாவை அவருக்கு பயன்படுத்தவே தெரியில்லை, த்ரிஷா வேஸ்ட் என விமர்சனம் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த விமர்சகர் ஒருவர் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், கருப்பு படத்தில் ஒண்ணுமே இல்லை இயக்குனர் படத்தை சொதப்பி வைத்து இருக்கிறார். படத்தினுடைய ஹீரோ சூர்யா 50 நிமிடங்கள் கழித்து தான் வருகிறார். அப்படி வந்தும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. கருப்பு திரைப்படத்தினுடைய சப்ஜெக்ட் சூப்பராக இருக்கிறது. ஆனால், ஆர்.ஜே பாலாஜி சரியாக ஹோம் ஒர்க் செய்யவில்லை. சில்லித்தனமாக, அருவருப்பு காமெடி போல படத்தை எடுத்துள்ளார்.

Karuppu Suriya RJ Balaji
Photo Credit:

படம் வேஸ்ட்: கோர்ட் பத்தியும் அதில் நடக்கும் மோசடிகள் பற்றியும் 10 ஆயிரம் பக்கம் எழுதலாம். ஆனால், ஆர்.ஜே பாலாஜி சரியாக ஹோம் ஒர்க் செய்யாமெல் மொக்கயா ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். இந்த படம் சோசியல் மெசேஜை சொல்கிறதா? காமெடியா? என ஒண்ணுமே தெரியவில்லை. ஆர்.ஜே.பாலாஜிக்கு சுத்தமா படம் எடுக்கவே தெரியவில்லை. இந்த படத்தின் கதையை மெண்டல் ஹாஸ்பிடலில் உட்கார்ந்து கொண்டு ஸ்கிரிப்ட் எழுதியது போல இருக்கு. இப்படி ஒரு கதையை எழுதுவதற்குத்தான் மூன்று ஆண்டுகள் ஆர்.ஜி.பாலாஜி கஷ்டப்பட்டாரா? என்னிடம் கொடுத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை இரண்டு நாளில் எழுதி கொடுத்து இருப்பேன். இன்று தியேட்டரில் படம் பார்த்த அனைவரும் மிகவும் ரசித்து படம் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் சூர்யாவின் ரசிகர்கள்.

த்ரிஷாக்கு வேலையே இல்ல: ஆர்.ஜே.பாலாஜி தான் பாடத்தில் பெரும்பான்மையான காட்சிகளில் வருகிறார். சூர்யாவை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. கதை நல்ல கதை, இதை வேற இயக்குனர் எடுத்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். ஆனால் ஆர்.ஜே.பாலாஜி கெடுத்து விட்டார். சூர்யா சார் தயவு செய்து நல்ல கதைகளை கேட்டு நிதானமாக படத்தில் நடிங்க, சுதா கொங்கரா, சிறை, கார்மேனி, பேட் கேர்ள் போன்ற பட இயக்குநர்களில் படங்களில் நீங்கள் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் த்ரிஷாவுக்கு வேலையே இல்லை. திரிஷா வேஸ்ட் எதுக்கு படத்தில் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அதே போல இசையும் ரசிக்கும் படி இல்லை என படத்தை மொத்தமாக கழுவி ஊற்றி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X