For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இவங்களயெல்லாம் தியேட்டர்ல பார்த்தது..இப்ப ஜோடியா நடிக்கிறேன்..மனம் திறந்த ஆடுகளம் நரேன் !

  |

  சென்னை : கலர்ஸ் தமிழ் சேனலில் "எங்க வீட்டு மீனாட்சி" என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. சீரியல் ப்ரோமோவே மக்களை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கி இருக்கிறது.

  Aadukalam Naren Interview | Enga Veetu Meenatchi Serial | Tamil Filmibeat

  வள்ளியம்மை கதாப்பாத்திரத்தில் பூர்ணிமா பாக்கியராஜ், ஸ்ரீதாசிவதாஸ்,ஜீவா,பூர்ணிமா பாக்கியராஜ், ஆடுகளம் நரேன் என பலமான கதாப்பாத்திரங்களோடு களமிறங்குகிறது எங்க வீட்டு மீனாட்சி.

  காரைக்குடி ஸ்டைலில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது. சினிமாவிற்கா சீரியலுக்கா என வியக்கத்தக்க வகையில் மிரளவைக்கிறது. அதில் ஜீவாவின் அப்பாவாக நடிக்கிறார் ஆடுகளம் நரேன்.

  பிக்பாஸ் சீசன் 5... இந்த வாரம் வெளியேற போவது யார் ? பிக்பாஸ் சீசன் 5... இந்த வாரம் வெளியேற போவது யார் ?

  ரீ-என்ட்ரி நரேன்

  ரீ-என்ட்ரி நரேன்

  கேள்வி : மறுபடி சீரியல்-க்கு வந்திருக்கீங்களே, மக்கள் கருத்துக்கு உங்க பதில் என்ன?

  பதில் : எனக்கு சீரியல், சினிமா ரெண்டும் ஒன்னுதான். பாகுபாடுல்லாம் பாக்க மாட்டேன். சீரியல்-க்கு பண்ண கூடாது, வரமாட்டேன்னு ல்லாம் நான் சொல்லல. டேட் இல்ல, நேரமின்மை காரணம் தான். ரெண்டும் மேனேஜ் பண்ணனும். அவ்வளவுதான் விஷயம். இதுலயும் நல்ல கேரக்டர். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கும்

  இது தான் கதை

  இது தான் கதை

  கேள்வி : பார்க்கவே பிரம்மாண்டமான செட்டப்புடன் கூடிய இந்த சீரியல் எப்படி இருக்கும்?

  பதில் : ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சமமான தளத்தில் உருவாக்கப்பட்ட கதைக்களம். இவங்கள அதிகபடுத்தனும், இவங்கள குறைச்சி காட்டனும் அப்படியெல்லாம் இல்ல. வழக்கமான குடும்ப கதையாக இல்லாமல், குடும்பத்தில சின்ன பசங்களோட குணாதிசியங்களை, வித்யாசமான கோணத்தில் காட்டும் விருவிருப்பான தொடர்

  உங்கள் ஜோடி பிடிச்சிருக்கா?

  உங்கள் ஜோடி பிடிச்சிருக்கா?

  கேள்வி : பூர்ணிமா பாக்கியராஜ் உங்களுக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. இது பத்தி உங்கள் கருத்து.?

  பதில் : நான் ல்லாம் அவங்கள தியேட்டர்-ல பார்த்துருக்கேன். இப்ப அவங்களோட நடிக்கிறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிகப்பெரிய நடிகை அவங்க. இருந்தாலும் ரொம்ப கேஷ்வலா, ப்ரண்டிலியா இருக்காங்க. ரொம்ப எதார்த்தமா இருக்கறதால, ஈஸியா பண்ண முடியுது. அவங்க கூட நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா நிறைவா இருக்கு.

  அது ரொம்ப கஷ்டம்ப்பா

  அது ரொம்ப கஷ்டம்ப்பா

  கேள்வி : உங்கள பொருத்தவரை சீரியல் சினிமா எது ஈசி ?

  பதில் :சினிமா ஈசி.. சீரியல் கஷ்டம். வேலை செய்யும் விதம், ஒரு நாளைக்கு நாலஞ்சி சீன் எடுத்தே ஆகனும், இதுமாதிரி நிறைய விஷயங்கள் சீரியல் ல உண்டு. ஆனா சினிமா அப்படி கிடையாது. சீரியல் பன்றது ரொம்ப சேலஞ்ச் ஆன விஷயம் கூட. சினிமா படங்கள் ல இப்ப ஒரு படம் நடிச்சி, அடுத்த ஆறுமாசம் கழிச்சி வேற படம் பண்ணி இப்படி சமாளிச்சிடலாம். ஆனா.. சீரியல் ல தினம் தினம் நம்மள ஃப்ரூவ் பண்ணிகிட்டே இருக்கனும். அது மிகப்பெரிய சவால்.

  மறுபடியும் மீட்

  மறுபடியும் மீட்

  கேள்வி : ஹீரோ ஜீவா மற்றும் இந்த டீம் எப்படி இருக்காங்க?

  பதில்: ஜீவா என்னோட அன்புத்தம்பி, நீண்ட நாள் எனக்கு பழக்கம். ரொம்ப நாள் கழிச்சி இதுல நடிக்கிறோம். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். இயக்குனர் ராம்குமார் ரொம்ப தெளிவா, குழப்பம் இல்லாம சரியா இருக்கக்கூடிய ஒருத்தர். என்ன செய்யப் போறோம்ங்கிறதுல நல்ல தெளிவும் முடிவாவும் இருப்பாரு. ஒர்க் ல ரொம்பவே நீட்டா இருக்கும். நல்ல ஸ்பீடா, க்வாலிட்டியா பண்ணுறாங்க. அவங்க ஸ்பீட் க்கு நான் தயாரா இருக்கனும்ன்னு தான் நெனக்கிறேன்.

  நல்ல டீம் ஒர்க்

  கேள்வி : எங்க வீட்டு மீனாட்சி டீம்-க்கு நீங்க சொல்ல விரும்பறது என்ன?

  பதில் : எல்லாருக்கும் என்னோட ஆல்தி பெஸ்ட். அதுதான் முதல்ல சொல்லனும். ஏன்னா ரொம்ப ஹார்ட் ஒர்க் டீம் இது. இத்தன பேர் மத்தியில, அவங்க குறிக்கோள் என்னவோ அத அடைய உத்வேகமா ஒரே மூச்சுல போறதுங்கிறது பெரிய விஷயம். அதுபோல மொத்த டீமும் இருக்காங்க. அதனால அவாங்களுக்கு முதல்ல என்னோட வாழ்த்துகள்.

  கேள்வி : சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த படம் எது?

  பதில் : படம் பார்க்கவே நேரமில்லங்க. அதான் உண்மை. எத்தனையோ படங்கள் ஓடிடி ல வருது, தியேட்டர் ல வருது. என் சூழ்நிலை காரணமா நல்ல படங்கள் நிறையவே பார்க்க முடியல. ரொம்ப மிஸ் பண்றேன்.

  என நம்மிடையே நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் ஆடுகளம் நரேன். வீடியோவை முழுமையாக ஃபிலிமிபீட் தளத்தில் காணலாம்.

  English summary
  Aadukalam Naren Share the Experience in Movie and Serials Exclusive Interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X