twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பருத்திவீரன் படத்தைப்பார்த்து.. தியேட்டரில் மயங்கி விழுந்தார் என் மனைவி..அமீர் ஓபன் டாக் !

    |

    சென்னை : என்னதான் கமர்சியல் படங்கள் தமிழ் ரசிகர்களை தொடர்ந்து குதுகல படுத்தி வசூலை வாரி குவித்து வந்தாலும், இன்றளவும் தரமான கதைகளைக் கொண்ட எதார்த்தமான திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

    எதார்த்தமான கதைகளை கையாளுவதில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் இருந்து வருபவர் நடிகர் அமீர்.

    இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்ட அமீர், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி இருந்தாலும் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    எல்லாம் லாக்டவுன் எஃபெக்ட்டா.. நீண்ட முடி.. முகம் முழுக்க தாடி.. சேரப்பா ஆளே வேற மாதிரி இருக்காறே!எல்லாம் லாக்டவுன் எஃபெக்ட்டா.. நீண்ட முடி.. முகம் முழுக்க தாடி.. சேரப்பா ஆளே வேற மாதிரி இருக்காறே!

    சூர்யாவின் தம்பி

    சூர்யாவின் தம்பி

    எதார்த்தமான கதை களங்களைக் கொண்ட ஒரு சில திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டு வரும் நிலையில், சிறந்த கதை அம்சத்தை கொண்ட தரமான திரைப்படங்கள் இன்றளவும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் சூர்யாவின் தம்பி கார்த்தி முதல்முறையாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட திரைப்படங்களில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் ஆகும்.

    இரண்டு வெற்றிப்படங்கள்

    இரண்டு வெற்றிப்படங்கள்

    சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், அதைத்தொடர்ந்து நடிகர் ஜீவாவை வைத்து ராம் என்ற படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானதோடு நம்பிக்கைக்குரிய இயக்குனராக வலம் வந்தார். இவ்வாறு மௌனம் பேசியதே மற்றும் ராம் என இரண்டு வெற்றித் திரைப்படங்களை கொடுத்த அமீர் மூன்றாவதாக நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    கார்த்தியின் அறிமுகப்படமாக அமைந்த இந்த திரைப்படம் 2007-ம் ஆண்டு வெளியாகி, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மிகப்பெரிய வெற்றியடைந்து தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என பல்வேறு விருதுகளை தட்டிச் சென்ற இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மறக்க முடியாத

    மறக்க முடியாத

    மதுரை மண் வாசனையுடன் கிராமத்து கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பல்வேறு பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் இன்றளவும் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலராலும் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

    தூங்க வேண்டாமாயா

    தூங்க வேண்டாமாயா

    இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பருத்திவீரன் திரைப்படம் பற்றி பேட்டி ஒன்றில் கூறிய அமீர் இந்த படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தேம்பித் தேம்பி அழுததாகவும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் இந்த படத்தை வெகுவாகப் பாராட்டியதோடு " என்னயா படம் எடுத்து வைச்சிருக்க, இந்த மாதிரி படமெடுத்தா நாங்க போய் தூங்க வேண்டாமாயா" என கூறியுள்ளதாக அந்த பேட்டியில் தெரிவித்தார்.

    அமீரின் மனைவி

    அமீரின் மனைவி

    பருத்திவீரன் வெளியான முதல் நாள் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்றிருந்த அமீர், வெளியே ரசிகர்கள் இடம் விமர்சனங்களை கேட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் உள்ளிருந்து வேகமாக வந்து, படத்தை பார்த்துவிட்டு ஒரு பெண்மணி மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என சோடா ஒன்றை வாங்கி சென்றதாகவும், பின் விசாரித்தபோது அந்த மயக்கம் போட்டு விழுந்த பெண்மணி அமீரின் மனைவி தான் என அங்கிருந்தவர்கள் சொல்ல, இந்த மறக்கமுடியாத நிகழ்வை இயக்குனர் அமீர் அந்த பேட்டியில் மூலம் பகிர்ந்துள்ளார்.

    English summary
    Aamir shared many interesting memories about the ‘Paruthiveeran‘
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X