27 வயதில் பொண்ணு.. இப்போ, 7 மாத கர்ப்பம்.. தினம் தினம் வளைகாப்பு.. சீரியல் நடிகை அகிலா பேட்டி!
சென்னை: சன் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நடிகை அகிலா, அதன்பிறகு, ராதிகா நடித்த செல்வி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து, மலர்கள், ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள், கல்யாண பரிசு, சக்தி, அழகு, முந்தாணை முடிச்சு,அஞ்சலி, அபூர்வ ராகங்கள், முள்ளும் மலரும், அபியும் நானும் என போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர். மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
இதில், என் 22 வயதில் இருந்தே தொகுப்பாளினி, சீரியல் என பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தேன். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்,நான் நினைத்தது போலவே கடவுள் எனக்கு அந்த வரத்தை கொடுத்துவிட்டார். நான் கர்ப்பமானத்திற்கும் நான் கமிட்டாகி இருந்த அனைத்து சீரியல்களும் முடிந்துவிட்டன. தற்போது, என் கர்ப்ப காலத்தை ஜாலியாக அனுபவித்து வருகிறேன். நான் மகிழ்ச்சியாக இருப்பதை விட என்னுடைய நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கர்ப்பமாக இருந்தால் ஒருவருக்கு ஒருமுறைதான் வளைகாப்பு நடக்கும். ஆனால் எனக்கு தினம் தினம் வளைகாப்பு தான், நான் கர்ப்பமாக இருப்பதை அவர்கள் கொண்டாடுகிறார்கள் இதனால், என் பாப்பாவும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

நடிகை அகிலா: அபியும் நானும் சீரியலில் நடிக்கும்போது அந்த சீரியலின் இயக்குனர் எப்போமா என்னை தாய் மாமா ஆக்குவ என்று கேட்டுக்கொண்டே இருப்பார். 5வது மாதத்தில் எனக்கு வளைகாப்பு நடந்த விஷயம் தெரிந்து நான் தானே முதலில் வளையல் போட வேண்டும். அதற்குள் யார் வளையல் போட்டது என்று உரிமையோடு வந்து எனக்கு வளைகாப்பு நடத்தினார். அதே போல, அபியும் நானும் சீரியலில் நடித்த முகில் என்ற சிறுவனின் அம்மா, வீட்டிற்கு வந்து வகை வகையான சாதம் செய்து, நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தினார். அதே போல, எனக்கு 27 வயதில் ஒரு பொண்ணு இருக்கா, அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியலில், ஹீரோயின் அவள் தான். அவளும் எனக்கு நண்பர்களும் சேர்ந்து வளைகாப்பு செய்தார்கள் என்றார்.
நல்ல அனுபவம்: உப்பு புளி காரம் சீரியலில் நடித்தது குறித்து பேசிய அகில, சீரியல் என்பது சுட சுட தோசை மாதிரி இருக்கும் ஆனால், வெப் தொடர் என்பது என் கதாபாத்திரம், எந்த மாதிரி நடிக்கப்போகிறோம் என்பது முன்பே தெரிந்துவிடும். இதனால், எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஜாலியா அமைதியாக படப்பிடிப்பு நடக்கும். சீரியலில் நடிப்பது என்பது ரொம்ப கஷ்டம், ஹீரோ, ஹீரோயின், வில்லி கதாபாத்திரத்திற்குத் தான், அதிக ரோல் இருக்கும். இதனால், எப்போது படப்பிடிப்பு முடியும் என்று தான் இருக்கும். ஆனால், வெப் தொடரில் குறைந்த அளவு சீன் தான் இருக்கும் இதனால், நாம ரிலேக்ஸாக வேலை செய்யலாம். அதுவும் நல்ல அனுபவம்.
நான் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியலில் ஹீரோயின், வில்லி, குணசித்திர கதாபாத்திரம் என பல ரோலில் நடித்து இருக்கிறேன்.இதற்கு எனக்கு துணையாக இருந்தவர் என் கணவர் தான். இதுவரை என் கணவர், என் குடும்பம் பற்ற நான் மீடியாவில் காட்டியது இல்லை. ஏன் என்றால், என் குடும்பம் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் போன்றது என்று அந்த பேட்டியில் அகிலா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











