வெப் சீரிஸ்ல பாட்டுக்கு பட்ஜெட் கிடையாது.. நடிகை நமீதா சுவாரஸ்யம்!
சென்னை: இயக்குனர் வெற்றி மாறன் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று அனந்தம் படத்தில் நடித்த நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் உடன் பணிபுரிவது என்பது மிகப்பெரிய விஷயம் என்றும், அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
அனந்தம் படப்பிடிப்பின் போது, அன்புதாசன் ஒரு சில காட்சிகளில் அழுது விட்டதாக கூறிய அவர், நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

நான் கேரள பொண்ணு
கேள்வி: உங்களுடைய திரைப்பயணம் எப்படியிருக்கிறது.
பதில்: எனது சொந்த ஊர் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த தொடுப்புழா. நான் ட்ரிப்ள்ஸ் படத்தில் பிராமினிக் பாஜை பேசக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்தேன். தற்போது ப்ராமினிக் பாஷை நல்லவே பேச வருகிறது. தற்போது ஜீ5 ஒடிடி தளத்தில் இயக்குனர் ப்ரியா இயக்கி வெளியாகியுள்ள அனந்தம் வெப்சீரியஸில் நடித்துள்ளேன் என்றார்.

ஜாலியான படம்
கேள்வி: அனந்தம் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நான், அனந்தம் படத்தில் ஜாலியான கேரக்டர் ரோல் பண்ணியிருக்கிறேன். பொதுவாக இயக்குனர் பிரியா என்றாலே ரொம்ப ஜாலியான படம் இயக்கக்கூடியவர். அந்த வகையில் இயக்குனர் பிரியா மனதில் இருக்கின்ற கதாபாத்திரத்தை நாங்கள் அனைவரும் செய்திருக்கிறோம். அதை அவர்கள் அழகாக காட்டி இருக்கிறார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அனுபவத்தையும், அவர்களின் வீட்டில் நடந்த விஷயங்களும் தான் படத்தின் கதை.

நோ ரொமான்ஸ்
கேள்வி: அனந்தம் படத்தில் ஏதாவது ரொமான்ஸ் சீன் ஏதும் உண்டா?
பதில்: வெப்சீரியஸ் என்றாலே பாடலுக்கென்று பணம் ஒதுக்குவது கிடையாது. அதுபோல படத்திலும் எனக்கும், நடிகர் அன்புதாசனுக்கும் இடையே ரொமான்ஸ் சீன் எதுவும் கிடையாது.

நடிகர் பிரகாஷ்ராஜ் திறமையானவர்
கேள்வி: நடிகர் பிரகாஷ்ராஜிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: நடிகர் பிரகாஷ்ராஜ் உடன் பணிபுரிவது என்பது மிகப்பெரிய விஷயம். ஒரு வெப் சீரியஸில் பெரிய நடிகர் வந்து 10 நிமிடத்திற்குள் நமது கதாபாத்திரம் வருகிறது என்றால் எவ்வளவு பெரிய விஷயம். இந்த படத்தில் பணிபுரியும் அனைவரும் ரொம்ப திறமையானவர்கள். அவர்களிமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

அழுதார் அன்புதாசன்
கேள்வி: நடிகர் அன்புதாசன் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நடிகர் அன்புதாசன் பொதுவாக ஹ்யூமர் ரோல் பண்றவர். ஆனால் இந்த படத்தில் எமோஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருப்பார். ஒரு நடிகருடன் நடிக்கும்போது இணை நடிகரும் அவருக்கு இணையாக நடித்தால் மட்டுமே காட்சிகள் நன்றாக வரும். அதுபோல தான் நான் என்னதான் சிறப்பாக நடித்திருந்தாலும், அன்புதாசன் அழகாக எனக்கென்று சிறப்பாக நடித்திருந்தார். நல்ல கெமிஸ்ட்ரி கொடுத்திருந்தார். அவர் நடித்த நடிப்பிற்கு இணையாக நான் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு சில சீன்களில் அன்புதாசன் அழுதார். அவரிடம் கேட்டேன் இது எனக்கு வைக்கப்பட்டிருந்த சீன் தானே என்று கலாட்டா செய்தேன். ரொம்ப ஜாலியாக இருந்தது என்றார்.

முதல் எபிசோடு எனக்கு பிடிக்கும்
கேள்வி: நடிகர் அன்புதாசனை தவிர, மற்றவர்களில் யாரை உங்களுக்கு பிடிக்கும்?
பதில்: இந்த வெப்சீரிஸில் நடித்த அனைவருமே எனக்கு முன்பே தெரியும். அபிஷேக், அரவிந்த், அமிர்தா சீனிவாஸ் போன்றவர்கள் சிறந்த நடிகர்கள். அவர்கள் அனைவரும் இந்த எபிசோடில் ஒன்றாக நடிப்பது என்பது பெரிய விஷயம். இந்த கதையானது 8 எபிசோடுகளாக வருகிறது. எனக்கு பிடித்தது என்னவோ நான் நடித்த முதல் எபிசோடு மட்டும் தான் என்றார்.
வெற்றி மாறனின் தீவிர ரசிகை
கேள்வி: உங்களின் ஆசை என்ன?
பதில்: அனந்தம் படமானது, ஒரு வீடு அதை சுற்றி நடக்க இருக்கின்ற எமோஷன்கள், சுவர்களுக்கு பின்னால் இருக்கின்ற நிறைய சென்டிமென்ட் போன்றவை தான் கதைகளம். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஏதாவது ஒன்று நம்முடைய வாழ்க்கையுடன் கனெக்ட் ஆகும் என்று கூறிய அவர், இயக்குனர் வெற்றிமாறனின் தீவிர ரசிகை என்றார். மேலும் அவர் கூறுகையில், இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று குறிப்பிட்டார்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/pnFxDzSpCFk இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகை நமீதா இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











