twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆக்ஷன் மட்டும் பார்த்தால் வீடியோகேம் தான், எமோஷன் பிளஸ் ஆக்ஷன் தான் வெல்லும்...பத்ரி ஸ்பெஷல் பேட்டி

    |

    சென்னை: உங்களை நம்பி மோசம் போய் விட்டதாக இமான் அண்ணாச்சி தெரிவித்தாக பட்டாம்பூச்சி பட இயக்குநர் பத்ரி நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

    Recommended Video

    Director Badri | 1989 Period படம் எடுப்பது கஷ்டமா இருந்துச்சு | Pattampoochi | *Interview

    மேலும் அவர் கூறுகையில், படத்தினுடைய சி.ஜி. வேலை மட்டும் 12 மாதங்கள் நடைபெற்றதாகவும், கவிஞர் பா.விஜய் மீது பொறாமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இயக்குநர் பத்ரி சுந்தர்.சி யுடன் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். அது மட்டும் அல்லாமல் சீரியல், சினிமா என்று எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருப்பவர் . நமது பில்மிபீட் தளத்திற்காக பிரத்தியேக பேட்டி ஒன்று கொடுத்து உள்ளார் .

    விஜய்க்கு நடிப்பு மேல் ஆர்வம் வரும்னு எங்களுக்கு தெரியாது.. விஜய் அம்மா சொன்ன செம தகவல்!விஜய்க்கு நடிப்பு மேல் ஆர்வம் வரும்னு எங்களுக்கு தெரியாது.. விஜய் அம்மா சொன்ன செம தகவல்!

    ரொம்ப ஈஸி

    ரொம்ப ஈஸி

    கேள்வி: தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சுந்தர்.சி குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: நான் முதன்முதலில் இயக்குநர் சுந்தர்.சி யிடம் டயலாக் ரைட்டர், அசிஸ்டென்ட் டைரக்ட்டர் , அசோசியேட் டைரக்டர் என்று பணியாற்றினேன். மாங்கல்யம், மலர்கள் போன்ற சீரியல்களை இயக்கினேன். பின்பு என்னை நம்பி, வீராப்பு படம் மூலம் எனக்கு இயக்குநர் அங்கீகாரத்தை வழங்கினார். இந்த வாய்ப்பை எந்த காலத்திலும் நான் மறக்க மாட்டேன். இயக்குநர் பற்றி நான் கூற வேண்டுமென்றால், உண்மையான வேலை செய்பவரை சரியாக கண்டுபிடிப்பவர் எங்களுடைய இயக்குநர் . அவருடைய படத்துக்கு டயலாக் எழுதுவது என்னை பொறுத்தவரை ரொம்ப ஈஸி. ஏனென்றால் என்ன மாதிரி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்பது உள்பட அனைத்தையும் சொல்லி விடுவார்கள். நமது வேலை அனைத்தையும் ஒருங்கிணைப்பது மட்டுமே என்றார்.

    விஞ்ஞானம் வளரவில்லை

    விஞ்ஞானம் வளரவில்லை

    கேள்வி: பட்டாம்பச்சி திரைப்படத்தின் மையக்கரு என்ன?

    பதில்: பட்டாம்பூச்சியின் கதையானது 1989ல் நடைபெறுகின்றது. அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானம் பெரிதாக வளரவில்லை. பெரும்பாலும் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு போலீஸ் தன் மூளையை தான் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.டிஜிட்டல் யுக்திகள் கிடையாது. ஒரு வேளை போலீசை விட, குற்றவாளி அதிகமாக யோசித்தால் தண்டனையிலிருந்து தப்பி விடுவான். அத்தகைய காலக்கட்டத்தில் கொடூரமான மனம் படைத்த சைக்கோ கில்லருக்கும், நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடைபெறும் கதை தான் பட்டாம்பச்சி.

    சி.ஜி.க்கு 12 மாதங்கள்

    சி.ஜி.க்கு 12 மாதங்கள்

    கேள்வி: படப்பிடிப்பின் போது நீங்கள் அடைந்த சிரமம் என்ன?

    பதில்: சென்னையில் எந்த தெருவிலும் ஷூட்டிங் செய்ய முடியவில்லை. ஏனென்றால் 1989 காலக்கட்டத்தில் சென்னையில் எல்.ஐ.சி. பில்டிங் மட்டும் தான் பெரியது. அதிகபட்சமான இரண்டு மாடி கட்டிடம் தான் இருந்தது. இது போன்ற இடங்கள் சென்னையில் தற்போது எங்கும் இல்லை. பின்பு ஒரு வழியாக பாண்டிச்சேரியில் கதைக்கு ஏற்றவாறு இடம் கிடைத்தது. இரண்டு மாடி கட்டிடங்களுடன் மற்றும் நேரான தெருக்கள் இருந்தது. ஆனால் தெருவில் இக்காலக்கட்டத்தில் உள்ள இன்னோவா காரும் இருந்தது. நாங்கள் படப்பிடிப்பு நடத்தி, சி.ஜி.( computer graphics ) மூலம் 12 மாதங்கள் கஷ்டப்பட்டு தெருவில் நிற்கும் இன்னோவா கார், நவீன மாருதி கார், கேபிள் ஒயர் போன்றவற்றை நீக்க வேண்டியிருந்தது . மேலும் ஜெயிலில் டேப் ரிக்கார்டரில் ஜெய் வாக்குமூலம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட வேண்டும். அந்த காலக்கட்டத்தில் உள்ள டேப்ரிக்கார்டர் படம் தான் கூகுளில் கிடைத்தது. டேப் ரிக்கார்டர் கிடைக்கவில்லை. ஒரு வழியாக 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு டேப் ரிக்கார்டரில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் நடிகர் ஜெய் என்றார். டேப் ரிக்கார்டர் கண்டு பிடித்து அதை ஓட வைப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது.

    முதலில் தயக்கம்

    முதலில் தயக்கம்

    கேள்வி: இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜெய் எப்படி ஒத்துக்கொண்டார்?

    பதில்: கலகலப்பு 2 படப்பிடிப்பின்போது நடிகர் ஜெய் நடிக்கும்போது எனக்கும் அவருக்கும் ஒரு நட்பு உருவானது. அதன் காரணமாக இந்த கதாபாத்திரத்தை முதலில் நடிகர் ஜெய்யிடம் கூறினேன். முதலில் தயங்கினார். இந்த கதாபாத்திரத்தின் மனது முழுவதும் கறுப்பு கிடையாது. அவனது மனதில் கொஞ்சம் கிரே ( grey ) கலர் இருக்கும். உங்களை போன்ற ஹீரோ ஒருவர் ஏற்று நடித்தால் ஆடியன்சுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றேன். இந்த கதையானது ஹீரோ ஜெய்க்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் நடிகன் ஜெய்க்கு கண்டிப்பாக பிடிக்கும். தியேட்டரில் பாராட்டு வாங்குவர். மிகவும் சவாலான கேரக்டர் என்றேன். பின்னர் கதையை கேட்டவுடன் ஒப்புக்கொண்டார்.

    எப்படி நான் நம்புறது

    எப்படி நான் நம்புறது

    கேள்வி: உங்களுக்கு பிடித்த வசனம் எது?

    பதில்: நடிகர் ஜெய், "நான் தான் பட்டாம்பூச்சி" என்று ஹீரோயினிடம் கூறும்போது... இதை எப்படி நான் நம்புறது என்று ஹீரோயின் கேட்பார். அதற்கு ஜெய் கூறும்போது, "செத்தவன் வந்து சாட்சி சொல்கிறவரைக்கு கொன்றவன் சொல்றது நம்பணும்" என்ற வசனம் என்னை மிகவும் கவர்ந்தது. அது போல் நடிகர் சுந்தர்.சி என்ன என்ன நடந்தது என்று இமான் அண்ணாச்சியிடம் விளக்கும்போது, "என்னுடைய நேரத்தை கொன்று, அவன் கொல்வதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டான்" என்று ஆங்கிலத்தில் கூறும் வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார் பத்ரி.

    மோசம் போய் விட்டேன்

    மோசம் போய் விட்டேன்

    கேள்வி: இப்படத்தில் இமான் அண்ணாச்சி இருப்பதால், காமெடி காட்சிகள் எந்தளவுக்கு இருக்கும்?

    பதில்: இமான் அண்ணாச்சி மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர். திராவிட முகம் அவருக்கு அமைந்திருக்கிறது . இவர் ஹீரோவுடன் பயணிக்கும் பெர்னானட்ஸ் என்கிற போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம். இமான் அண்ணாச்சியிடம் போனில் தான் நீங்கள் ஒரு கதாபாத்திரம் செய்ய வேண்டும் என்றேன். உடனடியாக அவர் பாண்டிச்சேரி வந்து விட்டார். அவர் நினைத்தது ஒன்று.., ஆனால் நடந்தது ஒன்று... அவர் நினைத்தது என்னவென்றால், சுந்தர்.சி படம், பத்ரி இருக்கிறார். படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். வெளுத்து வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் வந்து விட்டார். ஆனால் எங்கள் கதையில் அவருடைய கதாபாத்திரத்திற்கு சோகம் மட்டுமே. இது குறித்து அவர் கூறுகையில், உங்களையெல்லாம் நம்பி நான் மோசம் போய் விட்டேன் என்றார். படத்தை நடித்து முடித்து விட்டு, டப்பிங் எல்லாம் முடித்து விட்டு என்னை பார்த்து, படம் நன்றாக வந்துள்ளது என்று பெருமிதத்துடன் சென்றது சந்தோசம் .

    இன்னொரு இயக்குநர்

    இன்னொரு இயக்குநர்

    கேள்வி: ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இப்படத்திற்கு சண்டைக்காட்சி முக்கியம். இயற்கையாக அமைய வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், ரேணிகுண்டா படங்களில் உள்ள சண்டை போன்று எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகரை தொடர்பு கொண்டேன். அவருக்கும் பட்டாம்பூச்சி கேரக்டர் பிடித்து போய் விட்டது. மொத்த படப்பிடிப்பில் 25 நாட்கள் அவர் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினார். இன்னொரு இயக்குநராக பணியாற்றினார் என்று கூறினால் மிகையாகாது என்றார் இயக்குநர் பத்ரி.

    அவர் மீது எனக்கு பொறாமை

    அவர் மீது எனக்கு பொறாமை

    கேள்வி: கவிஞர் பா.விஜயின் பாடல்வரிகள் எப்படியிருக்கிறது?

    பதில்: முதலில் ஜெய் கதாபாத்திரத்தை பா.விஜயிடம் கூறினேன். அவருடைய முகம் மாறியது. பாசிட்டிவாக எழுதணும்.. இவ்வளவு நெகட்டிவ் ஆக எழுத சொல்கிறீர்கள் என்றார். நல்லதை வர்ணிப்பது எளிது. தீய தூதனை வர்ணிக்க முடியாது. நான் ஜெய் கதாபாத்திரத்திற்கு உருவாக்குவதற்கு 6 முதல் 7 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். ஆனால் கவிஞர் பா.விஜய் 30 நிமிடத்தில் எழுதி கொடுத்து விட்டார். உண்மையில் எனக்கு அவர் மீது பொறாமை தான். அவருடைய திறமை எனக்கு இருந்தால் இந்த காலக்கட்டத்தில் இரண்டு படங்கள் முடித்திருப்பேன் என்றார் ஆதங்கத்துடன்.... இப்படத்திற்கு பா.விஜயின் பாடல்கள் வலிமை சேர்க்கும் என்றார் பத்ரி .

    எமோஷன் அவசியம்

    எமோஷன் அவசியம்

    கேள்வி: படம் வெற்றியடைய வன்முறை அவசியமா?

    பதில்: இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் படம் ஓட வேண்டும் என்பதற்காக வன்முறையை கையில் எடுப்பதில்லை. வன்முறையினால் படம் ஓடுவதில்லை. வன்முறையை தாண்டி ஒரு கதை இருக்கணும், எமோஷன் இருக்கணும். சொல்லப்போனால் கே.ஜி.எப்.1 மற்றும் 2 இல் அம்மா சென்டிமென்ட்,இன்னும் சொல்ல போனால் 2ல் பிள்ளைதாச்சி மனைவி இறந்து விடுகிறார். சென்டிமெண்ட் தான் ஆக்ஷனையும், வன்முறையையும் நிறுத்தி வைக்கிறது. வெறும் ஆக்ஷன் மட்டும் பார்த்தால் வீடியோ கேம் மாதிரி தான் இருக்கும். எமோஷன் தான் படத்தை ஓட வைக்கிறது. பட்டாம்பூச்சி படத்தில் வன்முறையை தாண்டின எமோஷன் இருக்கும் என்றார்.

    நான் வளரக் காரணம்

    கேள்வி: கேமராமேன் குறித்து நீங்கள் கூறுவது...

    பதில்: இயக்குநர் சுந்தர் சி.யை அழகாக காட்டியிருக்கிறார் கேமராமேன் கிச்சா. எல்லா ஹீரோக்களும் கம்பீரமான மிடுக்கான போலீஸ் ரோல் பண்ண ஆசைப்படுவார்கள். ஆனால் சவாலான இந்த போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து கொடுத்தவர் சுந்தர்.சி. கிச்சா ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். அது மட்டும் அல்லாமல் சுந்தர் சி போன்றவர்கள் தனக்கு தானே எடுத்துக் கொள்ளக்கூடிய சவால் தான், என்னை போன்றவர்கள் வளருவதற்கு காரணம் என்று தனது குரு மீது அளவு கடந்த பாசத்தையும் மரியாதையையும் இந்த பேட்டியின் மூலம் வெளி படுத்தினார் இயக்குநர் பத்ரி. முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/bZhLehEeZr0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பட்டாம்பூச்சி பட இயக்குநர் பத்ரி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Action Plus Emotional Combo Movies will work out Says Director Badri in Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X