Exclusive : “ஓவியாவும் நானும்..”... காதல், படம், எதிர்காலத் திட்டம்.. மனம் திறக்கும் ஆரவ் !

நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

காதல், படம், எதிர்காலத் திட்டம் குறித்து மனம் திறக்கும் ஆரவ் !

சென்னை: மக்களின் அன்புக்கு நன்றிக் கடனாக நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைப்பதாகத் தெரிவித்துள்ளார் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளரும், நடிகருமான ஆரவ்.

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை தட்டிச் சென்றவர் ஆரவ். முன்பு பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார் இவர். தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியது, சினிமாவில் எதிர்காலத் திட்டம் போன்றவை குறித்து ஒன்இந்தியாவிடம் அவர் பேசியதாவது:-

மாற்றமில்லை:

மாற்றமில்லை:

"பிக் பாஸுக்கு முன்பும் பின்பும் ஆரவ் ஒரே மாதிரி தான். பர்செனலா எந்த மாற்றமும் இல்ல. வாழ்க்கை மாறியிருக்கு. மக்களோட அன்பு கிடைச்சிருக்கு. நிறைய ஆதரவு கிடைத்திருக்கிறது. இதற்கு நன்றி கடனாக நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். பொறுப்புகள் அதிகமாகி இருக்கு.

ராஜபீமா:

ராஜபீமா:

இப்போது ராஜபீமா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு தியேட்டர் உரிமையாளருக்கும், ஒரு யானைக்குமான பந்தம் தான் இந்த படம். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு உள்ளது. படம் ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு.

லவ்வர் பாய் இமேஜ்:

லவ்வர் பாய் இமேஜ்:

ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன்.

ஓவியாவுடன் காதலா?

ஓவியாவுடன் காதலா?

ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம்.

நல்ல நண்பர்:

நல்ல நண்பர்:

எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர். ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

நான் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை முழுமையாக பார்க்கவில்லை. இறுதி நாளன்று தான் நான் சென்றேன். ரித்விக்காவுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்.

சந்தேகமேயில்லை:

சந்தேகமேயில்லை:

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை முடிவுகள் எல்லாமே வெளிப்படையாக தான் இருக்கும். சென்ற முறையும் முடிவுகள் வெளிப்படையாகத் தான் இருந்தன. இந்த முறை எந்த சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் வாக்கு நிலவரங்களை வெளியிட்டனர்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X