Abbas: ஸ்கூல் படிக்கும்போதே 45 நிமிஷம் முத்தம்.. நடிகர் அப்பாஸ் வெளிப்படுத்திய சீக்ரெட்
சென்னை: கடந்த 1996ம் ஆண்டில் வெளியான காதல் தேசம் படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானவர் அப்பாஸ். இந்தப் படத்தை கதிர் இயக்கியிருந்தார்.
தபு, வினீத் உள்ளிட்டவர்களும் காதல் தேசம் படத்தில் நடித்திருந்த நிலையில், புதுமுகம் அப்பாஸ் பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த அப்பாஸ், ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
பள்ளி நாட்களில் 45 நிமிடங்கள் தொடர்ந்து முத்தம் கொடுத்த அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியானது காதல் தேசம். முதல் படத்திலேயே ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றார் அப்பாஸ். இந்தப் படத்தில் வினீத், தபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆனாலும் கதிர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அப்பாசிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஏராளமான படங்களில் ஹீரோவாகவும் இரண்டாவது ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அப்பாஸ், ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது சொந்த நாட்டிற்கே வந்துள்ள அப்பாஸ், தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார். தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பல கட்டங்களில் தன்னுடைய காதலிகளாக இருந்தவர்கள் குறித்து பேசியுள்ளார். தான் பள்ளி படிக்கும் காலத்திலேயே ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து 45 நிமிடங்கள் முத்தம் கொடுத்ததாக தன்னுடைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியில் மியூசிக் வீடியோவில் நடித்தபோது, ஒரு முத்தக்காட்சியில் நடித்ததாகவும், இந்தக் காட்சியை நான்கு கோணங்களில் படமாக்கியதாகவும் கூறிய அப்பாஸ், தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்தக் காட்சி தனக்கும் அந்த நடிகைக்கு போர் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அப்பாஸ், நடிகர் கமல்ஹாசன் தனக்கு போன் செய்து, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாக பகிர்ந்துள்ளார்.

ஆனால் அந்த நிகழ்ச்சி தனக்கு செட் ஆகாது என்று கூறி தான் மறுத்துவிட்டதாகவும் அப்பாஸ் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். தான் வெளிநாட்டில் செட்டில் ஆன நிலையில், கோலிவுட்டில் ஒரு சிலருடன்தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் அதில் கமல்ஹாசனும் ஒருவர் என்றும் அப்பாஸ் தெரிவித்துள்ளார். கமலுடன் தான் சிறப்பான பழக்கத்தில் இருந்ததாகவும் அவருடன் இணைந்து நடித்த தருணங்களை மறக்க முடியாது என்றும் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகன் கண்டிப்பாக, முன்தயாரிப்புடன் சூட்டிங்கிற்கு வரவேண்டும் என்று கமல்ஹாசன், தனக்கு அறிவுரை வழங்குவார் என்றும், தான் சிலமுறை டயலாக்குகளை மறந்துவிட்டாலும், அதை அந்த தருணத்திலேயே தன்னுடைய சொந்த டயலாக்கை போட்டு பேசி, சிறப்பாக்கிவிடுவார் என்றும் அப்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். கமலுடன் இணைந்து பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்நேகாவிற்கு ஜோடியா நடித்திருந்தார் அப்பாஸ்.


Click it and Unblock the Notifications











