டிக்டாக் தடை.. சீன பிரச்சனை.. ராணுவ வீரர் பழனி.. செக்யூரிட்டி குறும்படத்தை இயக்கிய உதயா பேட்டி!

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேட்டியாக சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி 'செக்யூரிட்டி' எனும் குறும்படத்தை இயக்கிய நடிகர் உதயாவின் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

குறும்பட இயக்குனர் ஆன நடிகர் உதயா | ACTOR UDHAYA CHAT | SECURITY SHORTFILM | FILMIBEAT TAMIL

இயக்குநர் ஏ.எல். விஜய்யின் சகோதரர் ஆன உதயா தலைவா, உத்தரவு மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக வலம் வந்த உதயா, இந்த லாக்டவுன் சமயத்தில் இயக்குநராக அப்கிரேட் ஆகியுள்ளார்.

Actor and Security shortfilm director Udhaya exclusive interview!

சமீபத்தில் வந்த டிக்டாக் தடை பிரச்சனை, இந்திய - சீன எல்லை பிரச்சனை, ராணுவ வீரர் பழனியின் வீரமரணம் என பல்வேறு விஷயங்கள் தனது மனதில் ஒரு வித உந்துதலை ஏற்படுத்தியது என்றும், அந்த அனைத்தையும் வைத்து ஒரு கதையை உருவாக்கி அதனை குறும்படமாக இயக்கினேன் என உதயா உணர்ச்சிகரமாக கூறுவதை வீடியோ பேட்டியில் கண்டு ரசியுங்கள்..

இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் மற்றும் நடிகர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த குறும்படத்தை பார்த்து மனதார பாராட்டி உள்ளனர் என்பதையும் தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி இந்த குறும்படத்தை பாராட்டி பதிவிட்ட வாட்ஸப் வீடியோ வைரலாகி வருவது குறித்தும் உதயா கூறியுள்ளார். இந்த வீடியோ பேட்டியில் அந்த வீடியோவும் இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க..

தேசப்பற்று மற்றும் சமூக அக்கறை கொண்ட குறும்படத்தை இயக்கியுள்ள உதயா, சகோதரர் ஏ.எல். விஜய்க்கு டஃப் கொடுக்கும் விதமாக இன்னொரு இயக்குநராக வெள்ளித்திரையில் மின்னுவார் என்பது உறுதியாக தெரிகிறது.

மற்றொரு சிறப்பாக நடிகர் உதயாவின் மகனும் இந்த குறும்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக உள்ள வசனங்களும் வேற லெவலில் வைரலாகி வருகின்றன. சுதந்திர தினத்தன்று தேசப்பற்றை வளர்க்கும் இந்த குறும்படத்தையும், அதை இயக்கிய இயக்குநரின் சிறப்பு பேட்டியையும் கண்டு மகிழுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X