கதையை கேட்டதுமே நடிக்கனும்னு தோனிடுச்சு.. 'மாயநதி' குறித்து மனம் திறந்த நடிகர் அப்புக்குட்டி!
சென்னை: மாயநதி படம் குறித்து அப்படத்தில் நடித்த நடிகர் அப்புக்குட்டி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நடிகர் அப்புக்குட்டி ஏராளமான படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம்தான் அதிகம் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசப்பட்டினம், குள்ளநரி கூட்டம், அழகர் சாமியின் குதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அழகர்சாமியின் குதிரை படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் அப்புக்குட்டி.
இதனை தொடர்ந்து சுந்தரப்பாண்டியன், மூன்று பேர் மூன்று காதல், மரியான், வீரம், வேதாளம், பாயும் புலி
காகித கப்பல், நெஞ்சில் துணிவிருந்தால், காத்திருப்போர் பட்டியல், வெண்ணிலா கபடி குழு 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று ரிலீஸான மாயநதி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அப்புக்குட்டி. மாயநதி படத்தில் அபி சரவணன், வெண்பா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.
இதில் அபி சரவணனுக்கு நண்பராக நடித்துள்ளார் அப்புக்குட்டி. இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு சிறப்பு நேர்க்காணல் அளித்துள்ளார் அப்புக்குட்டி. அதில் பேசிய அவர், மாயநதி படத்தின் கதையை கேட்டவுடன் அதில் நடிக்க பிடித்து விட்டதாக கூறினார்.
இயக்குநர் அசோக் தியாகராஜன், ஒரு மருத்துவர். அவர் தன்னிடம் பேச படம் குறித்து பேச வந்தபோது, மருத்துவருக்கு இங்கு என்ன வேலை என கேட்டேன். ஆனால் அவர் சொன்ன கதையும் என்னுடைய கதாப்பாத்திரமும் எனக்கு பிடித்ததால் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் படத்தில் அபி சரவணன், வெண்பா ஆகியோர் மிகவும் அற்புதமாக நடித்திருப்பதாகவும் அவர் கூறினார். இதேபோல் வெண்பாவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் நரேன் குறித்தும் புகழ்ந்து தள்ளினார் அப்புக்குட்டி. அப்புக்குட்டி மேலும் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் வீடியோவாக உங்களுக்கு..


Click it and Unblock the Notifications











