twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரிசைக் கட்டி வந்த விஜய் பட வாய்ப்புகள்.. இந்த காரணத்துக்காக வேணாம்னு சொல்லிட்டேன்.. அருள் பேட்டி

    |

    சென்னை: எமன், அமரகாவியம் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகரா க மிரட்டி வரும் நடிகர் அருள் டி சங்கர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி இருக்கிறது.

    கொரோனா காலத்திலும், நமது பிலிமி பீட் ரசிகர்களுக்காக இப்படியொரு பேட்டியை அருள் டி சங்கர் கொடுத்துள்ளார்.

    பாண்டிச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட இவரது இயற் பெயர் அருள் டி ஜோதி என இருந்தது.

    Actor Aroul D Shankar interview!

    பல ஷார்ட் பிலிம்களில் வித்தியாசமான பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளியே வந்த மாணவரான அருள் ஜோதி, தனது பெயரை அருள் டி சங்கர் என மாற்றிக் கொள்ள ஒரு சூப்பர் காரணம் இருக்கிறது.

    தல அஜித் பிறந்தநாள்.. வெளியானது காமன் டிபி.. டிரெண்டாகும் #ThalaAJITHBdayGalaCDPதல அஜித் பிறந்தநாள்.. வெளியானது காமன் டிபி.. டிரெண்டாகும் #ThalaAJITHBdayGalaCDP

    விஜய் ஆண்டனி, தியாகராஜன் நடிப்பில் வெளியனா அரசியல் படமான எமன் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீவா சங்கர், எந்தவொரு ஆடிஷனையும் நடத்தாமல், இவருக்குள் இருக்கும் மேஜிக்கை நம்பி வில்லன் ரோல் கொடுத்ததை பார்த்து பூரித்துப் போன அருள், தனது பெயருக்குப் பின்னால் அவரது பெயரை இணைத்துக் கொண்டு அருள் டி சங்கர் ஆக மாறியுள்ளார்.

    மேலும், ஆரம்ப காலத்தில் நிறைய தளபதி விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், சாதாரண ரோல்கள் என்பதால், அதனை தவிர்த்து விட்டதாகவும், நிச்சயம் வெயிட்டான ரோலில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    அவரது முழுப்பேட்டியையும், தளபதி விஜய் குறித்தும், அவரது வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்தும் சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளதை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

    Read more about: interview பேட்டி
    English summary
    Actor Aroul D Shankar who done many villain roles recently. Now he gave a interview about his life and cinema journey to us.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X