சினிமால கதைய மட்டும் தான் நம்புவேன்..அருள்நிதி பிரத்யேக பேட்டி!
சென்னை: தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அருள்நிதி.
அருள்நிதி, ஜீவா நடிப்பில் இந்த வாரம் திரையரங்கில் களத்தில் சந்திப்போம் திரைப்படம் வெளிவரவுள்ளது.
களத்தில் சந்திப்போம் படத்தை குறித்தும், இன்னும் சில விஷயங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார் அருள்நிதி

ஜீவாவுடன் கூட்டணி
இந்த படத்தை தேர்வு செய்த காரணம் குறித்த கேள்விக்கு, ஜீவா உடன் இணைந்து நடிப்பது, அது மட்டுமன்றி சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 90வது படம் போன்ற காரணங்களால் இந்த படத்தில் நடிக்க மிகவும் விரும்பி ஒப்பு கொண்டதாகவும், கதையும் நன்றாக இருந்ததாகவும் பேட்டியளித்துள்ளார்.

ஜாலியாக நடிப்பார்
நடிகர் ஜீவாவின் நடிப்பில் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்னவென்ற கேள்விக்கு, கோ, ஈ, கற்றது தமிழ் M.A. ஆகிய படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜீவா மிகவும் ஜாலியாக வந்து நடித்து கொடுத்து விட்டு போவார் எனவும் பேட்டியின் போது கூறினார் அருள்நிதி.

கேமரா பணிகள்
களத்தில் சந்திப்போம் படத்தின் ஒளிப்பதிவு பணிகள் குறித்து பேசும் போது, தான் நினைத்ததை விட தன்னை சிறப்பாக காட்டியவர் யார் என்ற கேள்விக்கு, ஆறாது சினம், டிமாண்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K - 13 படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் என பதிலளித்தார் அருள்நிதி.

கே.ஜி.எஃப் ட்ரைலர்
பெண் ரசிகர்கள் எந்த படத்தின் மூலம் அதிகரித்தனர் என்ற கேள்விக்கு ஆறாது சினம், டிமாண்டி காலணி, குறிப்பாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் வரும் உயிர் உருவாத பாடல் மூலம் எனவும் கூறிய அவர், கே.ஜி.எஃப் ட்ரைலரை பெரிதும் பாராட்டி பேட்டியளித்துள்ளார் அருள்நிதி.


Click it and Unblock the Notifications











