அப்பா பொண்ணு நடிச்ச முதல் தமிழ் படம்... வியந்து பேசும்அருண்பாண்டியன் !

சென்னை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் அன்பிற்கினியாள்.

Recommended Video

அப்பா மகள் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் | ACTOR ARUN PANDIAN EXCLUSIVE | FILMIBEAT TAMIL

இந்த படத்தில் நடிகர் அருண் பாண்டியன் அவரின் மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்துள்ளார்.

அன்பிற்கினியாள் படத்தில் நடித்த அனுபவம் குறித்து "பில்மி பீட் -க்ளோஸ் கால்" நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார் அருண்பாண்டியன்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை குறித்து பேசிய அருண்பாண்டியன், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது எழும் ரசிகர்களின் கைத்தட்டலே படத்தின் வெற்றியை தீர்மானித்து விட்டது எனவும், ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

படத்திற்கு பலம்

படத்திற்கு பலம்

கீர்த்தி பாண்டியனுக்கு அப்பாவாக அருண் பாண்டியன் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலமே தாங்கள் நிஜ வாழ்வில் அப்பா - மகளாக இருப்பது எனவும், தமிழ் சினிமாவில் முதல் முறையாக அப்பா - மகள் படத்திலும் அப்பா - மகள் ஆக நடித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கிள் டேக் ஷாட்

சிங்கிள் டேக் ஷாட்

தன்னுடைய மகள் என்பதால் கீர்த்தி பாண்டியனை சினிமாவிற்கு கொண்டு வரவில்லை எனவும், அதற்கான முயற்சியில் கீர்த்தி பாண்டியன் அவரை ஈடு படுத்தி கொண்டார் எனவும், பல காட்சிகளில் சிங்கிள் டேக் ஷாட்டாக கீர்த்தி நடித்துள்ளார் எனவும் பாராட்டியுள்ளார்.

நெகிழ்ந்து பாராட்டி

நெகிழ்ந்து பாராட்டி

அருண் பாண்டியனின் நெருங்கிய நண்பரான பிரபல நடிகர் ராம்கி படத்தை பார்த்து முடித்த பின்னர் அருண்பாண்டியனையும், கீர்த்தி பாண்டியனையும் கண் கலங்கி நெகிழ்ந்து பாராட்டியதையும் இந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார் அருண் பாண்டியன். அது மட்டும் அல்லாமல் பல கேள்விகளுக்கு தங்கு தடையின்றி மனதில் பட்டத்தை உடனுக்கு உடன் சொல்லி சுவாரஸ்யமான பல பதில்கள் சொல்லி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X