For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிவாத்மிகா கூட ரொமான்ஸ் அனுபவம் குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறிய சுவாரஸ்ய தகவல்கள்!

  |

  சென்னை: ரா. கார்த்திக் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் நித்தம் ஒரு வானம்.

  நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

  இந்நிலையில் நடிகர் அசோக்செல்வன், நடிகைகள் ரிதுவர்மா, சிவாத்மிகா ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்புபேட்டியை இங்கு காணலாம்.

  சூர்யா – ஷங்கர் கூட்டணி பற்றி உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்… PS போல இன்னொரு பிரம்மாண்டம்?சூர்யா – ஷங்கர் கூட்டணி பற்றி உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்… PS போல இன்னொரு பிரம்மாண்டம்?

  மென்மையான காதல்

  மென்மையான காதல்

  கேள்வி: படத்தில் மூன்று கதாநாயகிகளில், உங்களுக்கு யாருடன் ரொமான்ஸ் காட்சிகள்...

  பதில்: படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் நடிகை சிவாத்மிகா கூட தான். அதுவும் ரொம்பவும் அழகான, மென்மையான, காதல் தான். பெரிசா ரொமான்ஸ் என்று சொல்ற அளவுக்கு சீன்கள் கிடையாது.

   எனக்கு பிடித்த வசனம்

  எனக்கு பிடித்த வசனம்

  கேள்வி: நடிகை சிவாத்மிகா, இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து....

  பதில்: இந்தப் படத்தில நான் மீனாட்சி என்கிற கதாபாத்திரம் செய்திருக்கிறேன். மீனாட்சியாக மாறுவதற்கு பெரிதாக எனக்கு எந்த சிரமமும் இல்லை. ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனதும் இயக்குநர் காட்சிகள் குறித்து, கூறியவுடன் உடனே எனக்கு இயல்பாகவே நடிக்க வந்துவிடும். மீனாட்சி ஒரு கூடைப்பந்து விளையாடுகின்ற கதாபாத்திரம். ரொம்ப பேசமாட்டா, ரொம்ப எஸ்பிரசிவான கேரக்டர். இந்தப் படத்தில் எனக்கு பிடிச்ச டயலாக் "நல்லா பேசறீங்க"ங்கற டயலாக் தான் எனக்கு பிடித்தது.

  அவர்களுக்கு நன்றி

  அவர்களுக்கு நன்றி

  கேள்வி: சிவாத்மிகா, காஸ்ட்யூம் டிசைனர் குறித்து...

  பதில்: இந்தப் படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக நவதேவி ராஜ்குமார் பணிபுரிந்துள்ளார். அவர்கள் ரொம்ப சின்சியராக வேலை பார்த்துள்ளார். இயக்குநர், கேமரராமேன் மற்றும் மூன்று கதாநாயகிகளின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ரொம்ப அருமையாக டிசைன் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்தில நிறைய லொகேஷன் உண்டு. அந்தந்த லொகேஷனுக்கு ஏற்றது போல் ரொம்ப கவனமா டிசைன் பண்ணியிருக்காங்க. உண்மையா அவங்களுக்கு எங்களோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

  சென்னையில் நிறைய நண்பர்கள்

  சென்னையில் நிறைய நண்பர்கள்

  கேள்வி: ரிது வர்மா, நீங்கள் தமிழில் எப்போது டப்பிங் பேசுவீர்கள்?

  பதில்: நான் எப்போழுதும் படங்களை தேர்ந்தெடுக்கும் போது எனக்குப் பொருத்தமான படங்களைத்தான் தேர்வு செய்வேன். என்னைப் பொறுத்தவரை புதுப்புது படங்கள் வரணும். அதில் என் நடிப்பை நான் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். படம் பார்க்கும் ரசிகர்கள், அவர்கள் பிரச்சனைகளை மறந்து 2 மணிநேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு நிச்சயம் நித்தம் ஒரு வானம் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், தமிழில் வசனம் பேசுவதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால் அதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. எதிர்காலத்தில் கண்டிப்பாக நல்லா தமிழ் கற்றுக் கொண்டு, டப்பிங் பேசுவேன். சென்னை எனக்கு இரண்டாவது வீடு மாதிரி. இங்க எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில நிறைய இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆசை. குறிப்பிட்டு ஒருத்தரை சொல்வது ரொம்ப கஷ்டம் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/YMbsVMKEZjo இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Ra. Directed by Karthik, Nitham Oru Vaanam starring actors Ashok Selvan, Ritu Varma, Aparna Balamurali and Shivathmika. The film was released in theaters on November 4 and has been well received by the fans. Actor Ashokselvan, actresses Rituvarma and Shivathmika gave a special interview to our filmibeat channel here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X