வாணி ராணி சீரியலில் கெட்டுப்போன சாப்பாடு.. ராதிகா செய்த அட்டகாசம்.. பப்லு அதிரடி பேட்டி!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர் பப்லு என்ற பிரித்திவிராஜ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால், சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் கலக்கி வருகிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்த பப்லு, ராதிகா சரத்குமாருடன் வாணி ராணியில் நடித்தது 'ஏழரை நாட்டு சனி' என பேசி இருந்தார். இதுபெரும் சர்ச்சையான நிலையில் Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், என்னுடைய கேரிகரில் பெஸ்ட் பர்ஃபாம் என்றால் அது அரசி சீரியல் மற்றும் வாணி ராணி சீரியல் தான். நான் வாணி ராணி சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தபோது, ஏன் ஓவராக நடிக்கிறீர்கள். மேடம் திட்டுகிறார்க, என்று என்னிடம் வந்து சொல்லுவார்கள். இதனால், என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். திட்டு வாங்கி விடுவோமோ என்ற பயம் இருந்ததால், கட்டுப்படுத்திக் கொண்டு சில காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தேன். என்னை ஃப்ரீயாக விட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக அந்த சீரியலில் நடித்திருப்பேன். சின்ன கேமராவில் இப்படி நடிக்கணும், பெரிய கேமராவில் இப்படி நடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், வாணி ராணி சீரியலில் இப்படி நடித்தால் போதும் என்று நினைத்து நடித்தேன்.

வாணி ராணி சீரியல்: அந்த நிகழ்ச்சியில் வாணி ராணி சீரியலின் போஸ்டரை பார்த்ததும், நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன். ஏனென்றால், நல்ல விஷயத்தை பற்றி பேசுவோம், கெட்ட விஷயத்தை பற்றி பேச வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். அந்த போட்டோவை பார்த்ததும் என்னுடைய ஆதங்கத்தை நான் தொட்டி தீர்த்து விட்டேன். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் எவ்வளவு நல்ல விஷயங்கள் பேசினாலும் அது வைரல் ஆகாது. ஏதாவது, தவறாக ஒரு வார்த்தை பேசி இருந்தால் அது வைரலாகிவிடும். எங்கே சென்றாலும் ராதிகா மேடம் பற்றி ஏன் அப்படி பேசுகிறீர்க என்று கேட்கிறார்கள். ராதிகாவிடமே பப்லு உங்களைப் பற்றி இப்படி தவறாக பேசிவிட்டாரே என்று கேட்டால், அவர்கள் ஆமாம் நான் அவனை செருப்பால் அடித்தேன், கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவேன் என்று பெருமையாகத்தான் பேசுவார். என்னை அவன் தவறாக பேசிவிட்டானா என்று நினைக்க மாட்டார். அது அவர்களின் சுபாவம். ஆனால், நான் அன்று அப்படி பேசி இருக்கக் கூடாது, உணர்ச்சி வசப்பட்டு அப்படி சொல்லிவிட்டேன் என்றார்.
கெட்டுப்போன சாப்பாடு: தொடர்ந்து பேசிய பப்லு, வாணி ராணி சீரியல் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்தது. நான் தனியாக ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். ஆனால், அங்கு இருந்த நடிகை நடிகர்களுக்கு, வெளியில் இருந்து சமைத்த சாப்பாடு வரும். காலை 5 மணிக்கே காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் வைத்து விடுவார்கள். ஒருமுறை அப்படி வைத்த மதிய உணவு கெட்டுவிட்டது. இதை என்னிடம் பல நடிகை, நடிகர்கள் கூறினார்கள். நான் உடனே ராதிகாவிடம் இதைப் பற்றி கேட்டேன். அவர் அனைவரையும் அழைத்து சாப்பாடு நன்றாக இல்லையா, என கேட்டார். அப்போது யாருமே கெட்டுவிட்டது என்று சொல்லவே இல்லை நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே ராதிகா வேண்டும் என்றே பிரச்சனை செய்றியா என, என்னை திட்டினார். அதன் பிறகு நானே அழைத்து சென்று சாப்பாட்டை காட்டினேன். அன்றிலிருந்து அனைவருக்கும் நல்ல உணவு கிடைத்தது என்று பப்லு அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











