‘வாணி ராணி‘ல நடிச்சது தப்பு.. ராதிகா என்னை கிழவனாக்கிட்டா.. புலம்பிய நடிகர் பப்லு!
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பப்லு என்ற பிரித்திவிராஜ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். வானமே எல்லை, பாண்டிநாட்டு தங்கம், அவள் வருவாளா என பல திரைப்படத்தில் நடித்து பெயர் எடுத்த இவருக்கு, சினிமாவில் வாய்ப்பு இல்லாததால், சீரியலில் நடித்தார். தற்போது, சினிமாவில் என்ட்ரியாகி அட்டகாசமான ரோலில் கலக்கி வரும் இவர், Aadhan Cinema என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில்,நான் சினிமாவில் 40 வருடமாக இருக்கிறேன், எல்லாவிதமான போராட்டம், எல்லாவிதமான அவமானத்தையும் பார்த்து விட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் இது தேவையில்லை என்று முடிவு செய்து விட்டேன். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, பணம் சொத்து, வீடு என அனைத்தும் போய்விட்டது. பிறகு நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போதுதான், என்னுடைய நண்பர் வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அழைத்தார். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. ஏனென்றால், ராதிகா சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கிறார். அவர், தமிழ் சினிமாவின் அவ்வையார், அவருக்கு ஜோடி என்றால் நானும் வயதானவனாக தான் இருக்க வேண்டும். அந்த சீரியல் எனக்கு கிழவன் என்கின்ற ஒரு பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்தேன் அதிலும் ஒரு அப்பா கதாபாத்திரத்தில் நடித்தேன். இதனால், பப்லூ அப்பா கதாபாத்திரத்திற்கு தான் சரியானவர் என்கின்ற பெயர் வந்துவிட்டது.

நடிகர் பப்லூ: அதைத் தொடர்ந்து 19 படத்தில் என்னை அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். ஆனால், முடியாது என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு தான் 'ஏஸ்' படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைத்தார்கள். கதை கேட்டதும் எனக்கு பிடித்து இருந்ததால், ஓகே சொல்லிவிட்டேன். பட வாய்ப்பு இல்லாமல் நான் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருந்தேன். என்னிடம் அழகு, நடிப்பு, திறமை என அனைத்தும் இருக்கிறது. தமிழ் படங்கள் என்றால் தமிழில் டப்பிங் பேசுறேன். தெலுங்கு படம் என்றால் தெலுங்கில் டப்பிங் பேசுவேன். ஹிந்தி படம் என்றாலும் ஹிந்தியில் நானே டப்பிங் பேசுவேன். அப்படி இருந்தும் எனக்கு ஏன் பட வாய்ப்புகள் வரவில்லை, நாம் ஏன் ஒரு உயரத்தை தொட முடியவில்லை என்று நான் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால், சினிமாவிற்கு அதற்கான நேரம் வர வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த நேரம் எனக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. ஏஸ் படத்திற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அந்த திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல, தெலுங்கிலும் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்றார். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் 100 சதவிகிதம் கடுமையான உழைப்பு, ஒரு சதவிகிதம் லக் இருந்தால் சாதித்து விடலாம் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.
ஷீத்தலுடன் காதல்: நடிகர் பப்லு பிரத்தியவராஜ், ஷீத்தல் என்ற 24 வயது பெண்ணை ஒரு நிகழ்ச்சியில் மனைவி என்று அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, 57 வயது கிழவனுக்கு 24 வயது பெண்ணு கேட்குதா என பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இந்த விமர்சனத்திற்கு எல்லாம் பப்லு மற்றும் ஷீத்தல் இருவரும் பதிலளித்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்குள் கருத் துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து ஷீத்தல், சுமேஷ் என்கிற தடகள வீரரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











