விஜய் கிரிக்கெட் பால் மாதிரி.. புது பால் பளபளனு இருக்கும்.. பப்லூ பேட்டி!
சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த முக்கியமான நடிகராக உள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில், விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்துள்ளார். அது தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இருபது வருடத்திற்கு மேல் முன்னணி ஸ்டார் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், அரசியலுக்குள் வருவதைப் பற்றி வதந்திகள் நீண்ட ஆண்டுகளாக இருந்தபோதும், 2024 ஆம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து, தமிழக வெற்றிக்கழகம் என்று தனது கட்சியின் பெயரை தொடங்கினார். அரசியல் கட்சி தொடங்கியதுமே, சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினாலும், அவரின் அரசியல் வருகை ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

விஜய்யின் அரசியல் வருகை: 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர அரசியல் பணியில் இறங்கி இருக்கும் விஜய், முதல் முறையாக திருச்சியில் மக்களை சந்திக்க நேரடியாக சந்தித்து பேசி வந்தார். கரூர் துயர சம்பவத்திற்கு பின், விஜய் நேரடியாக மக்களை சந்திக்காமல், தடிதங்கள் மற்றும் பொது அறிக்கைகள் வழியாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். கல்வி, போதை, ஊழல், பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தமிழக வெற்றிக்கழகம் அதிக கவனத்தை செலுத்தி வருவதால், மக்கள் மத்தியில் விஜய்யின் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கிரிக்கெட் பந்து போல: இந்நிலையில், நடிகர் பப்லு பிரித்விராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பப்லு, விஜய் உச்ச நடிகராக 1000 கோடிகள் சம்பாதித்துவிட்டு, சினிமாவிலேயே இருக்காமல், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்திருக்கிறார். 2026 தேர்தலில் நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன், விஜய் சரியான ஆளா தப்பான ஆளா என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஒரு மாற்றம் வர வேண்டும் என நான் நினைக்கிறேன். விஜய் ஒரு கிரிக்கெட் பந்து போல, புது பந்து ஷைனிங்கா இருக்கும், ஒரு வேகம் இருக்கும், ஒரு பவுன்ஸ் இருக்கும், அந்த மாதிரி ஒரு மாற்றம் வரும் என்று நான் நம்புகிறேன். பல கோடிய சம்பாதித்தவர் அதைவிட்டு விட்டு, அரசியலுக்கு வருகிறார் என்றார். மக்களுக்காக அவர், ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவருக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என்றார்.


Click it and Unblock the Notifications











