பிக்பாஸ் டைட்டில வின் பண்ண போறது யார்? நடிகர் போஸ் வெங்கட் சொல்றத கேளுங்க!
சென்னை: நடிகர் போஸ் வெங்கட் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் பிக்பாஸ் சீசன் 3யில் வெற்றி பெறபோவது யார் என தெரிவித்துள்ளார்.
நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சினிமாவில் பிரபலமானார். சிங்கம், தேவராட்டம், வை ராஜா வை, தொடரி, சகாப்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஆட்டோ ஒட்டுநராக இருந்து தற்போது ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் போஸ் வெங்கட் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார்.
அதில் தனக்கு சென்னையில் பிடித்த இடம் அரும்பாக்கம் ஆட்டோ ஸ்டான்ட்தான் என்று கூறியுள்ளார். தான் ஆட்டோ ஓட்டுநராக இருந்த அந்த ஸ்டான்டிற்கு சீஃப் கெஸ்ட்டாக சென்றதையும் பெருமையாக நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சேரன், சாண்டி, மதுமிதா ஆகியோர் ரியல் லைஃபில் எப்படி இருப்பார்களோ அப்படியே பிக்பாஸ் வீட்டிலும் இருக்கிறார்கள் என்றார்.
சரவணன் முன்கோபக்காரர் என்ற போஸ் வெங்கட் அவரின் முன்கோபம் தான் அவர் வெளியேற காரணம் என்றும் கூறினார். ஓவியா அளவுக்கு பிக்பாஸ் சீசன் 3யில் யாரும் கவரவில்லை என்ற அவர், பிக்பாஸில் ஆண்கள்தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும் அவர் பகிர்ந்து கொண்ட பல்வேறு தகவல்கள் வீடியோவாக உங்கள் பார்வைக்கு..


Click it and Unblock the Notifications











