»   »  அப்பவே கமல் சார் எல்லோரையும் எச்சரிச்சாரு. நாமதான் கேக்கலை: போஸ் வெங்கட்

அப்பவே கமல் சார் எல்லோரையும் எச்சரிச்சாரு. நாமதான் கேக்கலை: போஸ் வெங்கட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் அஜித்தை பற்றி போஸ் வெங்கட்!

சென்னை : நடிகர் போஸ் வெங்கட், சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

அரசியல் ஆர்வம் கொண்ட போஸ் வெங்கட் தீவிர தி.மு.க-காரர். சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டு மேடையிலும் பேசியிருக்கிறார்.

சின்னத்திரை கலைஞர்கள் சங்கப் பொறுப்பில் இருக்கும் போஸ் வெங்கட்டிடம், சினிமா ஸ்ட்ரைக் தொடர்பாகவும், அவரது அரசியல் ஆசைகள் தொடர்பாகவும் பேசினோம்.

சினிமா ஸ்ட்ரைக் - பற்றி?

சினிமா ஸ்ட்ரைக் - பற்றி?

"இதுவரைக்கும் சினிமாவுல நடிகர் சங்கத்தால் நடந்த நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு. படிப்படியா முன்னேறி வந்திருக்கோம். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுறதா இருக்கட்டும்.. நடிகர் சங்கத்தோட மேம்பாடா இருக்கட்டும்.. இதுவரைக்கும் இருந்ததை விட இப்போ பெட்டரா இருக்கு இல்லையா.. அதே மாதிரி, இப்போ தயாரிப்பாளர் சங்கத்தலைவராகி இருக்கார் விஷால். இப்போ எடுத்திருக்கிற எல்லா நடவடிக்கைகளுமே நாம் வாயைப்பொளந்து அப்படியானு கேட்கிற அளவுக்கு இருக்கு."

நல்ல மாற்றமா இது?

நல்ல மாற்றமா இது?

"அதாவது ஒரு உண்மையை இப்போதான் தோண்டி வெளிய எடுத்த மாதிரி தெரியுது. இதுக்கு முன்னாடி இருந்தவங்களும் இப்படி நல்ல நடவடிக்கைகள் பண்ணியிருந்தாங்கனா வளர்ச்சி இன்னும் பெட்டரா இருந்திருக்கும். கியூப் விஷயத்தில் எல்லாம் முன்னாடியே நாம தெளிவாக இருந்திருக்கலாம். அப்பவே கமல் சார் எல்லோரையும் எச்சரிச்சாரு. நாமதான் கேக்கலை. இப்போத்தான் முழிச்சிருக்கோம்."

எதிர்காலத் திட்டம் - அரசியல்?

எதிர்காலத் திட்டம் - அரசியல்?

"அரசியல்வாதிங்கிறதுதான் என்னோட அடித்தளம். சமீபத்துல நடந்த ஈரோடு மாநாட்டுல தளபதி ஸ்டாலின் எனக்குப் பேசுறதுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஈரோடு மாநாட்டுல இதுவரைக்கும் பேசுன நடிகர்கள் எல்லோரையுமே எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி.-யாகவோ ஆக்கிருக்காங்க. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல்லயே நான் சீட் கேட்டிருந்தேன். என்னோட தொடர்ச்சியான கட்சி வேலை, ஈடுபாடுகளைப் பார்த்துட்டு மாநாட்டுல பேசுறதுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க."

இந்த முறை வாய்ப்பு கிடைக்குமா?

இந்த முறை வாய்ப்பு கிடைக்குமா?

"மாநாட்டில் இருந்து நல்ல விஷயங்கள் நடக்கும். அதனால், சீரியஸா தி.மு.க-வுக்காக வேலை பார்க்கணும். தொகுதியைப் பொறுத்தவரைக்கும் எப்பவுமே நாம ஒரு நாலு தொகுதியைக் கேட்போம். என்னோட சொந்த தொகுதியான அறந்தாங்கி கேட்பேன். இப்போ இங்கே இருக்கிற தொகுதி மதுரவாயல் கேட்பேன். கட்சியில் அவங்க கலந்துபேசி கொடுக்கிறதைக் கொடுப்பாங்க. நம்பிக்கையோட காத்திருக்கேன்."

குடும்பம்.. பிள்ளைகள்?

குடும்பம்.. பிள்ளைகள்?

"பையன் டென்த் ஸ்டாண்டர்டு போறான். பொண்ணு அஞ்சாவது போறாங்க. புள்ளைங்கலாம் நல்லா வளர்ந்துட்டாங்க. பொறுப்புகள் அதிகமாகிருச்சு. பசங்க மேலயும் இனி கவனம் வெச்சுக்கணும். அடுத்தடுத்த தளம் நோக்கி முன்னேறனும். அஜித் சார் கூட நடிக்கிற 'விசுவாசம்' மற்றும் சில படங்கள் கையில் இருக்கு. சினிமா, அரசியல், குடும்பம்னு எல்லா துறைகளையும் நல்லபடியா நிர்வகிக்கணும்." என்றார் போஸ் வெங்கட்.

English summary
Actor Bose venkat wants to get MLA seat in DMK. Here is an interview of him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X