ஷாலினியுடன் டீப் லவ்வில் அஜித்.. நடிகையை லவ் மேரேஜ் செய்யாதேனு அஜித்துக்கு அட்வைஸ் கொடுத்த நடிகர்
சென்னை: நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனது 64 வது படத்தின் வேலைகளை தொடங்குவதிலும் அஜித் ஆர்வம் காட்டி வருகிறார். இது மட்டும் இல்லாமல், அவரது கார் ரேஸ் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் இரண்டு விளம்பரப் படங்களில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. இதில் இவரது கார் ரேஸ் அணிக்கு விளம்பரதார பார்ட்னராக இணைந்த கேம்பா கோலா விளம்பரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அஜித் தீவிரமாக நடிகை ஷாலினியை காதலித்துக் கொண்டு இருந்தபோது, நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா அஜித்துக்கு கொடுத்த அட்வைஸ் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த ஒரே படம் அமர்க்களம். இந்த படம் அஜித்தின் 25ஆவது படம். இந்த படத்தை இயக்குநர் சரண் இயக்கி இருந்தார். படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. படத்தில் அஜித்தின் கதாபாத்திரமும் நடிப்பும் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையிலான அறிமுகம் ஏற்பட்டது. இந்த பழக்கம், அஜித்துக்கு ஷாலினி மீது காதலை ஏற்படுத்த, அதை படப்பிடிப்புத் தளத்திலேயே இயக்குநர் சரணை வைத்துக் கொண்டு இயல்பாகவே வெளிப்படுத்தி உள்ளார். நடிகை ஷாலினியும், தனது வீட்டில் வந்து பெரியவர்களைப் பார்த்துக் கேளுங்கள் என்று பதில் அளித்ததாகவும் இயக்குநர் சரண் பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது அனுஷ்கா மற்றும் அத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த 25 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அஜித்தின் எல்லா சுக துக்கங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களில் உறுதுணையாக இருந்து வருகிறார் ஷாலினி. தமிழ் திரையுல பிரபலங்களில் ரசிகர்களின் அபிமான தம்பதியர்களில் ஒருவராக உள்ளார்.
ரமேஷ் கண்ணா: இப்படி இருக்கும்போது, நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பின்போது, அஜித்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதாவது, " ரஜினி சாரைப் போன்ற ஒரு மாஸ் ஓபனிங் உங்களுக்கு கிடைத்து வருகிறது. அப்படி இருக்கும்போது வாழ்க்கையில் இன்னும் முன்னேறும் வழியை பாருங்கள். நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதுவும் யோசிக்காதீர்கள் என்று கூறினேன். இதை இயக்குநர் சரண் மானிட்டரில் பார்த்துவிட்டார். என்ன பேசிக்கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டார். நான் உடனே, அஜித்திடம் நான் சொன்னதைச் சொன்னேன்.

ஷாக்: அதைக்கேட்ட இயக்குநர் சரண் சார், அஜித்தும் ஷாலினியும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று கூறினார். இதைக் கேட்ட எனக்கு ஷாக் ஆகிவிட்டது. அதன் பின்னர் அஜித்திடம் நான் இந்த டாப்பிக்கை ஓபன் செய்யவே இல்லை" என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











