லிப்லாக் சீன் கிடைச்சா வேணாமுன்னு சொல்ல மாட்டேங்க.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
Recommended Video
சென்னை: லிப்லாக் சீன் கிடைத்தால் வேண்டாம் என கூற மாட்டேன் என்று மூத்த நடிகர் ஒரு படு ஜாலியாக கூறியுள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியை பூர்விகமாக கொண்டவர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.
1976ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சினிமாவில் ஆக்டிவாக உள்ளார். பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கே.பாலச்சந்தர்தான்
நாயகன், மைக்கெல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். டெல்லி கணேஷை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் பாலச்சந்தர்தான்.

சுவாரசிய தகவல்கள்
தற்போது நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வரும் டெல்லி கணேஷ் நமது தமிழ் பிலிமிபீட்டுக்கு பேட்டியளித்துள்ளார். தனது பேட்டியின் போது பல்வேறு சுவாரசிய தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

சந்திரஹாசன் கோபக்காரர்
குறிப்பாக அப்பத்தால ஆட்டய போட்டுட்டாங்க படத்தில் நடித்த சந்திரஹாசன், ஷண்முக சுந்தரம் உள்ளிட்டவர்கள் குறித்து பேசினார். அப்போது சந்திரஹாசன் கோபக்காரர், கமலின் வலது கையாக இருந்தவர் என்ற அவர், கமல் நடிப்பது பெரிய விஷயம் அல்ல ஆனால் சந்திரஹாசன் ஒரு முறை டயலாக்கை பார்த்தாலே பட்டென முடித்துவிடுவார் என்றார்.

கிடைச்சா நடிப்பேன்
இதைத்தொடர்ந்து லிப் லாக் காட்சி கிடைத்தால் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டெல்லி கணேஷ், ஜாலி மூடில் எனக்கு ரொம்ப ஆசை ஆனால் கிடைக்கவில்லை என்றார். இப்போது கிடைத்தால் நடிப்பீர்களாக என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அதை எப்படி வேண்டாம் என்பேன் என்று கேட்டு சிரித்தார்.

அமுக்கிவிடுவோம்
அது குறித்து இப்படி வெளிப்படையாக பேச முடியாது, அதனால் இப்படியே அமுக்கி விடுவோம் என்றார். மேலும் மைக்கெல் மதன காமராஜன் படத்தின் டயலாக்கை பேசிக் காட்டியும் நேயர்களை உற்சாகப்படுத்தினார் டெல்லி கணேஷ்.


Click it and Unblock the Notifications











