twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைத்தட்டி என்னை பாராட்டினார் தளபதி.. வாத்தியுடனான அனுபவங்களை பகிர்ந்தார் தீனா!

    |

    சென்னை: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோஹனன் நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது மாஸ்டர்.

    Recommended Video

    தளபதிக்கு ADVANTAGE எடுக்குறது பிடிக்காது |ACTOR DHEENA CHAT PART - 01 | FILMIBEAT TAMIL

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னர் வெளியான "கைதி" படத்தில் நடித்திருந்த தீனா தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

    அது குறித்தும், படப்பிடிப்பின் போது நடந்த அனுபவங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார் தீனா.

    சிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு? குடும்பத்துடன் பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!சிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு? குடும்பத்துடன் பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

    எப்போதும் மறக்கமாட்டேன்

    எப்போதும் மறக்கமாட்டேன்

    தளபதி விஜய்யுடன் சேர்ந்து வசனம் பேசும் காட்சி படத்தில் ஒன்று உள்ளது எனவும், அந்த காட்சியை நடித்து முடித்ததும் தளபதி விஜய் கைத்தட்டி தன்னை பாராட்டியதாகவும் கூறினார். அந்த நிகழ்வை தன் வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் எனவும் கூறியுள்ளார் தீனா.

    வியந்து பார்த்தேன்

    வியந்து பார்த்தேன்

    சண்டை காட்சிகள் குறித்து பேசிய தீனா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு ஷாட்டை கூற விஜய் அதை வேறு வகையில் சொல்ல அந்த ஷாட் வேற மாறி அமைந்ததாகவும், அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்த போது ஏதும் கூற முடியாத படி வியப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

    தோளில் சாய்ந்தார்

    தோளில் சாய்ந்தார்

    முதல் நாள் ஷூட்டிங்கின் போது கைதி படத்தில் நடித்ததற்கு தன்னை பாராட்டியதாகவும், படப்பிடிப்பின் போது சோர்வாக இருந்த விஜய் தன்னுடைய தோளில் சாய்ந்து ஓய்வு எடுத்தார் எனவும் பேட்டியளித்துள்ளார். சக நடிகர்களுடன் தளபதி மிகவும் எளிமையாக பழகியதாகவும் கூறியுள்ளார்.

    பாராட்டிய தீனா

    பாராட்டிய தீனா

    மாஸ்டர் படத்தின் துணை இயக்குனர்கள் அனைவரும் தன்னுடன் மிகவும் நெருக்கமாக பழகியதாகவும், நடிகர்களை தாண்டி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் மிகவும் உழைப்பதாக கூறி அவர்களை பாராட்டியுள்ளார் தீனா.

    மாஸ்டர் ஸ்பெஷல்

    மாஸ்டர் ஸ்பெஷல்

    மாஸ்டர் படம் குறித்து இன்னும் பல விஷயங்களை இந்த பேட்டியில் கூறியுள்ளார் தீனா. இந்த வீடியோவை மறக்காமல் பில்மி பீட் யூ டியூப் சேனலில் கண்டு களியுங்கள்.

    English summary
    Actor dheena interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X