"சார்.. அந்த வலிமை படம் பற்றி ரெண்டு வார்த்தை சொல்லுங்க.." ஜி.எம் சுந்தர் பதில் என்ன தெரியுமா?
சென்னை : சார்பட்டா பரம்பரை படத்தின் எதிரணியைச் சேர்ந்த துரைக்கண்ணு வாத்தியாராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜி.எம் சுந்தர்.
Recommended Video
இவர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற ரைட்டர் திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்து மிரட்டி உள்ளார்.
வலிமை திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜி.எம் சுந்தர் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ரைட்டர்
நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ரைட்டர். காவல்துறையில் முக்கியமான ஆனால் கவனிக்கப்படாத வேலையாக காணப்படும் ரைட்டர்களின் வலி மற்றும் அழுத்தங்களை இந்தப் படம் பதிவு செய்துள்ளது. வழக்கம்போல இந்த கதாபாத்திரத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி. அவரது நடிப்பில் இந்த கேரக்டர் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வழக்கறிஞராக
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜிஎம் சுந்தர். காவல்துறையினரின் வலிகளை பேசும், வழக்கறிஞராக நடித்துள்ளார் ஜிம் எம் சுந்தர். ரைட்டர் திரைப்படத்தில் வழக்கறிஞராக நான் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்காக நான் மிகவும் மெனக்கெட்டு ஒரு எதார்த்தமான வழக்கறிஞராக நடித்துள்ளேன் என்றார்.

கதை பிடித்துவிட்டது
இந்த கதாபாத்திரத்தை எனக்கு ரஞ்சித் அவர்கள் பரிந்துரை செய்து இருந்தார். இயக்குனர் என்னை அழைத்து இந்த ஸ்கிரிப்டை கொடுத்தார். கதையை படித்துப்பார்த்தேன் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதித்து விட்டேன் என்றார்.
வலிமை படத்தில்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜி.எம்.சுந்தர் நடித்து வருகிறார். இப்படம் குறித்த எந்தகேள்விக்கும் அவர் பதிலளிக்காமல், வலிமை படம் குறித்து பதிலளிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











