கார் ஓட்டவே தெரியாது.. ஆனா டிரைவரா நடிச்சி இருக்கேன்..உண்மையை உடைத்த பிரபலம் !

தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் க். அறிமுக நாயகன் யோகேஷ், குருசோம சுந்தரம், அனிகா, ஆடுகளம் நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் பாபுதமிழ் இந்த படத்தை இயக்கியுள்ளார். உளவியல் ரீதியான பிரச்சனைகளை கொண்டு வித்யாசமான கதையோடு வந்துள்ள திரைப்படம் க்.

நாயகனின் கார் டிரைவராக குருசோமசுந்தரம் நடித்துள்ளார். கதையின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று. சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார் குரு சோமசுந்தரம்.

 இயல்பா இருக்கனும்

இயல்பா இருக்கனும்

கேள்வி : எப்படி இவ்ளோ சிம்பிளா இருக்கீங்க?

பதில் : ஒரு நடிகனா இருந்துகிட்டு, பெரிய எதிர்பார்ப்போ பெரிய கஷ்டமோ என் வாழ்க்கையில வச்சிகிட்டு நான் நகர முடியாது. அதுக்கான நான் சிம்பிளா இருந்தாதான் முடியும். நீங்களா அதுன்னு மத்தவங்க ஆச்சரியப்படும்படி இருக்கமுடியும். என்ன நடக்குதுன்னு மக்கள் மன நிலய புரிஞ்சிக்க முடியுது.

 வண்டி ஓட்ட தெரியாது

வண்டி ஓட்ட தெரியாது

கேள்வி : டிரைவரா நடிச்சிருக்கீங்க. என்ன என்ன மெனக்கடல் எடுத்தீங்க?

பதில் : ஆக்சுவலா எனக்கு சிறப்பா கார் ஓட்டவே தெரியாது. பேசிக் தெரியும், அவ்வளவு தான். ஆக்‌ஷன் சொன்னா நடிக்க ஆரம்பிச்சிடுவேன். எங்க மூவ் பண்ணனும், ஓட்டனும்ன்னு தெரியும், பண்ணேன். ஆனா ரிவர்ஸ் எடுக்கல்லாம் கஷ்டம்தான். மத்தவங்கள உதவிக்கு கூப்பிட்டுதான் சமாளிச்சேன். எனக்கு குடுத்த கதாப்பாத்திரத்த நான் சிறப்பா பண்ணிருக்கேன் அவ்ளோதான்.

 செம டயலாக்

செம டயலாக்

கேள்வி : நீங்க நடிச்சதுல பிடிச்ச டயலாக் நியாபகம் இருக்கா?

பதில் :" அது அவங்க அம்மா மாதிரி, செவப்பு தேகம், சுருள் க்ராப்பு, ரோசக்காரப்பய " "ஏலே கட்டே அலங்காரம், இந்த உலகமே அப்படித்தான் " இந்த வசனங்கள் எல்லாம் என்னால மறக்கவே முடியாது.

 என் டீச்சர்

என் டீச்சர்

கேள்வி : மலையாளத்துல நடிச்சி, டப்பிங் பேசின அனுபவம் பத்தி சொல்லுங்களேன்.

பதில் : படத்துக்காகத்தான் மலையாளம் படிக்கவும் பேசவும் கத்துகிட்டேன். யூட்டியூப் தான் என்னோட டீச்சர். அதுல போயி கத்துக்கிட்டேன். தமிழ்ல இருந்து மலையாளத்துக்கு வந்து இவ்ளோ கேரக்டர் பண்றாரான்னு ஒரு தாட் எல்லாருக்கும் இருக்கும். ஆனா அத யாருமே யோசிக்கல. ஏன்னா நான் அவங்க மொழி பேசுறேன். எழுதுறேன். படிக்கிறேன். அது ரொம்ப வித்யாசமான அனுபவம்.

 சூப்பர் ஸ்டார் பாராட்டு

சூப்பர் ஸ்டார் பாராட்டு

கேள்வி : சூப்பர் ஸ்டார் கூட பேட்டைல நடிச்ச அனுபவம் ?

பதில் : முதல் தடவ பார்த்தப்பவே சூப்பர் ஸ்டார் , ஜோக்கர் படம் சூப்பரா இருந்துச்சுன்னு சொன்னாரு. அப்பறம் பட ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு, ஷூட்டிங்க் ல இருந்தப்ப சொன்னாரு, நீங்க நடிக்கிறது பேசுறமாதிரி இருக்கு. நான் பன்றது நடிக்கிறமாதிரி இருக்கு-ன்னு சொன்னாரு. அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் நம்மள அப்படி சொன்னதே பெரியவிஷயம் தான் என மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார் குரு சோமசுந்தரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X