எனக்கு நிறைய போலீஸ் ஆபிஸர்களை தெரியும், அவங்க அப்படி கிடையாது ...மனம் திறக்கும் ஜி வி பிரகாஷ்

சென்னை : வசந்தபாலன் இயக்கத்தில், கதா நாயகனாக ஜிவி பிரகாஷ் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயில். யதார்த்தமான ஜிவியின் நடிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

Recommended Video

விருதுகளை நோக்கி போவதில்லை GV Prakash Finest Journey in JAIL | Vasantha Balan

கதாநாயகியாக அபர்ணதி, காவேரி நகர் பெண்ணாக இயல்பாக நடித்துள்ளார். நண்பர்கள் பலர் , ஏரியா மக்கள் ,வட்டார வழக்கு ,காவல் துறை அதிகாரியாக ரவி மரியா என்று பலரும் நடித்துள்ளனர்.

"கருணா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஜிவி பிரகாஷின் சிறந்த நடிப்பு "என வசந்தபாலன் பாராட்டியுள்ளார். இது பற்றி தன் அனுபவங்களை பகிர்கிறார் ஜிவி.

மக்களோடு மக்களாக

மக்களோடு மக்களாக

கேள்வி : ஷூட்டிங்-ல் மக்கள் ஒத்துழைப்பு எப்படி?

பதில் : மக்கள் அவ்ளோ நல்லா பார்த்துகிட்டாங்க. அத்தனை அன்பா இருந்தாங்க. க்ரவுட் க்ளியர் பண்றதுகூட செஞ்சாங்க. தினமும் பாக்கறது குட்மார்னிங் சொல்றதுன்னு இயல்பா சந்தோஷமா குடும்பமா இருந்துச்சு

தொங்க விட்டுட்டாங்க பாஸ்

தொங்க விட்டுட்டாங்க பாஸ்

கேள்வி : ஆக்‌ஷன் படத்துல நிஜமாவே அடி விழுந்துச்சா உங்களுக்கு?

பதில் : அடியவிடுங்க.. பத்துமாடிக்கு மேல ரோப் ல தொங்க விட்டுட்டாங்க. அன்பறிவு மாஸ்டரோட சண்டைப்பயிற்சி. பில்டிங் ல ஏறி, கயித்துல தொங்கி பயங்கரமான ஆக்‌ஷன் படம். முதல் தடவ ஆக்‌ஷன் படம் பன்றேன். ரொம்பவே வித்யாசமான அனுபவமா இருந்துச்சு.

கிடைக்கறது கிடைக்கும்

கிடைக்கறது கிடைக்கும்

கேள்வி : விருதுகள் என்னல்லாம் வரும்ன்னு எதிர்பாக்குறீங்க ?

பதில் : விருதுகள நோக்கி நாம போறதில்ல. என்னோட 100% உழைப்ப குடுத்துருக்கேன். அதுக்கு என்ன கிடைக்கனுமோ அது கிடைக்கும். மக்களுக்கு பிடிச்சா போதும். என் கேரக்டர நான் நல்லா பண்ணிருக்கனா? ஜிவி பிரகாஷா பாக்காம மக்கள் கர்ணாவா பாக்கறாங்களா? இததான் நான் பாக்கறேன். அதான என் வேல. அதுல நான் சிறப்பா பொருத்தமா குடுப்பேன்.

இரண்டு பக்கமும் உண்டு

இரண்டு பக்கமும் உண்டு

கேள்வி : ஜெய்பீம், ஜெயில் எல்லாமே போலீஸ தப்பா சொல்லுதே ?

பதில் : திரைப்படங்கள் ல சில போலீஸ பத்தியோ அதிகாரிகள் பத்தியோ, அவங்கள சுட்டிக்காட்டுறதுனால ஒட்டுமொத்தமா தப்பானவங்கனு சொல்ல முடியாது. எனக்கு தெரிஞ்ச நல்ல ஜெனியூனா இருக்க போலீஸ் அதிகாரிகள் இருக்காங்க. உயர் அதிகாரிகள் இருக்காங்க. சினிமாவுலயும் தொல்ல குடுக்குற தயாரிப்பாளர்களும் உண்டு, அவ்வளவு அன்பா இருக்குற தயாரிப்பாளர்களும் உண்டு. எல்லா துறையிலும் இது இருக்கு. அதிகாரத்த வச்சி அத மிஸ் யூஸ் பண்ண கூடாதுன்னுதான் சொல்றோம்.

அழுத்தமான கேரக்டர்

அழுத்தமான கேரக்டர்

கேள்வி : மக்கள் மனசுல ஆழமான ஒரு கேரக்டரா வந்துட்டீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க? அடுத்த படங்கள் என்ன?

பதில் : உண்மையா அப்படியான கேரக்டர பண்ணனும்ன்னு தான் எனக்கும் ஆசை. வசந்தபாலன் சாருக்குதான் நான் நன்றி சொல்லனும். இப்படியொரு அழுத்தமான கதாப்பாத்திரம் குடுத்ததுக்கு. அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ரிலீஸ்க்கு தயாராகிட்டு இருக்கு. வரும் போதுதான் தெரியும் என்ன எப்போன்னு. நிச்சயமா சொல்றேன் என்று கூறி , அடுத்தபடத்திற்கான ஆவலுடன் இருக்கிறார் ஜிவி பிரகாஷ் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் விரிவாக நிறைய பதில்கள் சொல்லி உள்ளார். இந்த வீடியோ பேட்டியியை முழுமையாக பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலில்லும் காணலாம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X