twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஞ்சித் அண்ணா என்னை நினைத்து வருத்தப்படுவார்... ரைட்டர் நடிகர் எக்ஸ்க்ளூசிவ்

    |

    சென்னை : சமுத்திரக்கனி நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது ரைட்டர் படம்.

    Recommended Video

    Writer Movie | Actor Hari | ஒரு நடிகனா எனக்கு இது முக்கியமான படம் Filmibeat Tamil

    இந்தப் படத்தில் நடிகர் ஹரி கல்லூரி மாணவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அமீருக்கு என்ன ஆச்சு… ஏன் அதை மட்டும் காட்டவே இல்லை … கேள்வி கேட்கும் ரசிகர்கள் !அமீருக்கு என்ன ஆச்சு… ஏன் அதை மட்டும் காட்டவே இல்லை … கேள்வி கேட்கும் ரசிகர்கள் !

    இந்நிலையில் பில்மிபீட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    ரைட்டர் படம்

    ரைட்டர் படம்

    நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ரைட்டர். காவல்துறையில் முக்கியமான ஆனால் கவனிக்கப்படாத போஸ்டாக காணப்படும் ரைட்டர்களின் வலி மற்றும் அழுத்தங்களை இந்தப் படம் பதிவு செய்துள்ளது.

    சிறப்பான சமுத்திரக்கனி

    சிறப்பான சமுத்திரக்கனி

    வழக்கம்போல இந்த கதாபாத்திரத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி. அவரது நடிப்பில் இந்த கேரக்டர் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பான பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    ரைட்டராக சமுத்திரக்கனி

    ரைட்டராக சமுத்திரக்கனி

    நீண்ட காலமாக காவல்நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிவரும் சமுத்திரக்கனியின் உடல்மொழி அவரை உண்மையான ரைட்டராகவே பார்க்க வைக்கிறது. இரண்டு மனைவிகளுடன் தொப்பையும் தொந்தியுமாக அவர் நடித்துள்ளது

    முக்கிய கதாபாத்திரத்தில் ஹரி

    முக்கிய கதாபாத்திரத்தில் ஹரி

    படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஹரி. படத்தில் கல்லூரி மாணவராக அவர் நடித்துள்ளார். மேலும் பா ரஞ்சித் தயாரிப்பில் படத்தை இயக்கியுள்ளார் அவரது உதவியாளர் பிராங்க்ளின் ஜேக்கப். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக அவர் பதிவு செய்துள்ளார்.

    பதைகதைக்க செய்த கேரக்டர்

    பதைகதைக்க செய்த கேரக்டர்

    திடீரென போலீசிடம் மாட்டிக் கொள்ளும் இவர் ஏன் தான் அவ்வாறு பிடிபட்டுள்ளோம் என்பது குறித்து அறியாமல் இருக்க, பிற்பாதியில் இதற்கான விடையை ரசிகர்கள் அறிந்து கொளள் முடிகிறது இவர் இவ்வாறு மாட்டிக் கொள்வது ரசிகர்களை பதைபதைக்க செய்கிறது. சிறப்பாகவே செய்துள்ளார் ஹரி.

    சமுத்திரக்கனியிடம் கற்ற விஷயங்கள்

    சமுத்திரக்கனியிடம் கற்ற விஷயங்கள்

    இந்நிலையில் தற்போது பிலிமிபீட் நேயர்களுக்காக படம் குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஹரி. படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனியிடம் அதிகமான விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் ரைட்டரின் பங்கு குறித்து இந்தப் படத்தின்மூலமே தான் அதிகமாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    சிறப்பாக வேலை வாங்கிய இயக்குநர்

    சிறப்பாக வேலை வாங்கிய இயக்குநர்

    இதேபோல இயக்குநர் பிராங்க்ளின் நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கியதாகவும், அதை நாம் படத்தில் உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித் தன்னுடைய நடிப்பு குறித்து எப்போதும் பாராட்டுவார் என்றும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.

    பா ரஞ்சித் வருத்தம்

    பா ரஞ்சித் வருத்தம்

    தனக்கு அதிகமாக கதாபாத்திரங்கள் கிடைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் ஹரி கூறியுள்ளார். படத்தில் தான் பிஎச்.டி மாணவராக நடித்துள்ளதாகவும் ஆனால் நிஜத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் பாஷை

    தஞ்சாவூர் பாஷையை ஹரி படத்தில் பேசி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். இதற்காக டைக்டரின் மாமாவிடம் தான் கற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தனக்கு தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் பாராட்டுக்கள் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Actor Hari shares about Writer movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X